கேட்டோ என்ற அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டிருக்கின்றது. அதாவது உயர்கல்வி தகுதியுடன் ஒருவர் அமெரிக்காவின் நிரந்தர பிரஜையாக வேண்டுமென்றால் அவர் தோராயமாக 150 வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபெயர்வு அமைச்சகத்தினால், அமெரிக்காவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை அறிவித்தது. அந்த அறிவிப்பின் படி அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த கேட்டோ என்ற அமைப்பு, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தந்தால் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றுவிடலாம் என்ற அறிக்கையினை தயார் செய்து ஒரு சுவரசியமான தகவலை வெளியிட்டிருக்கின்றது. 2017ம் ஆண்டில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கின்றது.
எம்ப்ளாய்மென்ட் பேஸ்ட் என்ற அடிப்படையில் அதாவது வேலை அடிப்படையில் இந்த க்ரீன்கார்டுகள் வழங்கப்படுகின்றது. இபி (EB - Employment Based) பட்டியலில் இபி 1 விண்ணப்பதாரர்கள் யாவரும் எக்ஸ்ட்ராடினரி அபிலிட்டியுடன் இருப்பவர்கள். இது போன்ற குடியிருப்பாளர்கள் வெகுவிரைவில் அதாவது 34, 824 பேர் மற்றும் அவர்களுடைய துணைகள் மற்றும் குழந்தைகள் என 48, 754 பேர் இந்த இபி1 முறையில் இன்னும் ஆறு ஆண்டுகளில் குடியுரிமை பெற்றுவிடுவார்கள். இபி1ல் விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களின் (துணை மற்றும் குழந்தைகள் ஆகியோரை சேர்த்து) எண்ணிக்கை சுமார் 83, 578 ஆகும்.
இபி3 விண்ணப்பதாரர்கள் யாவரும் பேச்சுலர் டிகிரி முடித்துவிட்டு, குடியுரிமை பெற காத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு குடியுரிமை கிடைக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகும். இப்பிரிவில் விண்ணப்பத்திவர்களின் எண்ணிக்கை 54,892, அவர்கள் துணைகள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 60,381. காத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,273 ஆகும்.
இபி1 மற்றும் இபி3க்கும் இடைப்பட்ட விண்ணப்பதாரர்கள் யாவரும் உயர்கல்வி கற்ற இந்தியர்கள். இவர்கள் அமெரிக்காவின் குடியுரிமையை பெற தோராயமாக 151 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களின் சட்டம் கூறுகின்றது. இப்பிரிவின் கீழ் 2,16,684 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள். அவர்களின் துணைகள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 2,16,684. மொத்தம் இப்பிரிவில் 4,33,368 பேர் குடியுரிமை பெற காத்திருக்கின்றார்கள்.
இந்த மூன்று பிரிவிலும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 3,06,400 பேர் ஆவார்கள். அவர்களின் குடும்பத்தினர்களின் எண்ணிக்கை சுமார் 3,25, 819 ஆகும். ஆக 6,32,219 ஆகும்.
2017ல் மட்டும் 22,602 இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்கின்றது அமெரிக்கா. இபி1ல் 13,082 பேருக்கும், இபி2ல் 2,879 பேருக்கும், 6,641 பேருக்கு இபி3ன் கீழும் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
கேட்டோ இதுப் பற்றி கூறும் போது குடியுரிமை, காத்திருப்போர்களின் எண்ணிக்கையில் வழங்கப்படுவது கிடையாது. ஒவ்வொரு நாட்டினருக்கும் இவ்வளவு என்ற முறையில் குடியுரிமைகள் வழங்கப்படும் நிலையில் இந்தியர்களுக்கு 7% மேலான குடியுரிமைகளை இபி2 பிரிவில் வழங்க இயலாது என்றது.