தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனை!

தூங்குபவர்களிடம் இது போன்ற மோசமான பழக்கங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

By: Updated: December 14, 2018, 12:36:06 PM

பறக்கும் விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழகத்தை சேர்ந்தவருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி:

கடந்த 2015 ஆம் ஆண்டு  ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்றவர் பிரபு ராமமூர்த்தி.  தமிழகத்தை சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப துறையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிரபு கடந்த ஜனவரி மாதம், 3 ஆம் தேதி தனது மனைவியுடன் விகாஸ் நகரில் இருந்து டெட்ராய்டு நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். இரவு நேர பயணம் என்பதால் விமானத்தில் இருந்த பலரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரபு தனக்கு அருகில் இருந்த சக பெண் பயணிடம் அத்து மீறலில் ஈடுப்பட்டுள்ளார்.

தூக்க கலத்தில் கண் விழித்து பார்த்த போது அந்த பெண்ணின் ஆடைகள் கழற்றப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் அந்த பெண்  கூச்சலிட்டார். விமானத்தில் உள்ளவர்கள் வந்து விசாரித்ததில் பிரபு தான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து விமானம் உடனடியாக  தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் வைத்து பிரபுவை கைது செய்த அமெரிக்க எப்பிஐ போலீசார், அவர் மீது அமெரிக்காவின் டெட்ராய்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பிரபு ராமமூர்த்தி குற்றவாளி என உறுதி செய்து அமெரிக்க நீதிமன்ற  நீதிபதி டெரான்ஸ் பெர்க் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இருப்பினும் பிரபுக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கிற்காக வாதிட்ட வழக்கறிஞர் பிரபுவுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும்,அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வேலை செய்யும் பிரவுக்கு போதிய அளவு ஆங்கில மொழி திறமை இல்லை என்றும் குற்றச்சாட்டினார். அதே போல்  பிரபுவின் பெற்றோர்கள் விவசாயிகள் என்ற தகவலையும் பகிர்ந்தார்.

மேலும் பிரபு மீது பரிதாபப்பட்டு, நீதிமன்றம் கருணையே காட்டக்கூடாது என்றும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து பிரபு ராமமூர்த்திக்கான தண்டனை விவரத்தை நீதிபதி டெரான்ஸ் பெர்க்  தெரிவித்தார். அதில் “  ஓடும் விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலை அளித்த பிரபு ராமமூர்த்திக்கு 9 வருடம் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் விமானத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்” என நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “விமானத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். தூங்குபவர்களிடம் இது போன்ற மோசமான பழக்கங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இதுப்போன்ற பிரச்சனைகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த புகாரை தைரியமாக வெளியே சொல்லி, புகார் கொடுத்த பெண்ணை பாராட்டுகிறோம்” என்று கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபுக்கு அமெரிக்க நீதிமன்றம் அளித்துள்ள அதிரடி தண்டனை சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian man gets 9 years in prison for sex assault on flight

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X