கண்ணா லட்டு திண்ண ஆசையா?: 2 முறை 1 மில்லியன் டாலர், 2 மெர்சிடிஸ் கார்..மீண்டும் மீண்டும் பரிசுகளை வென்ற இந்தியர்

அமித் சரஃப் என்பவர் துபாய் ட்யூட்டி ஃப்ரீயின் 1 மில்லியன் அமெரிக்க டாலரை இரண்டு முறை வென்ற பத்து பேரில் ஒருவர்.

அமித் சரஃப் என்பவர் துபாய் ட்யூட்டி ஃப்ரீயின் 1 மில்லியன் அமெரிக்க டாலரை இரண்டு முறை வென்ற பத்து பேரில் ஒருவர்.

author-image
WebDesk
New Update
Indian man wins second mercedes

துபாய் ட்யூட்டி ஃப்ரீயின் 1 மில்லியன் அமெரிக்க டாலரை 2 முறை வென்றவர்கள் 10 பேர் மட்டுமே. Photograph: (Photo: Dubai Duty Free)

கண்ணா லட்டு திண்ண ஆசையா, இன்னொரு முறை லட்டு திண்ண ஆசையா, கண்ணா மூன்றாவது முறையும் லட்டு திண்ண ஆசையா என்ற கதை போல, ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை அதிர்ஷ்டம் ஒருவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அதுதான் துபாயில் வசிக்கும் இந்தியரான அமித் சரஃப்பின் கதை. புதன்கிழமை அன்று, 51 வயதான அவர் சமீபத்திய துபாய் ட்யூட்டி ஃப்ரீ குலுக்கலில் மெர்சிடிஸ் பென்ஸ் G500 (அப்சிடியன் பிளாக்) காரை வென்றார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இரண்டு முறை மில்லியனர் , இரண்டாவது மெர்சிடிஸ் காரை வென்றார்

துபாய் ட்யூட்டி ஃப்ரீ குலுக்கலில் சரஃப் ஒரு சொகுசு காரை வென்றது இது இரண்டாவது முறை. பிப்ரவரி 2023-ல், இந்தியாவில் சுமார் ரூ 2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S500 காரை அவர் வென்றார். அதுமட்டுமல்ல, சரஃப் துபாய் ட்யூட்டி ஃப்ரீயின் 1 மில்லியன் அமெரிக்க டாலரை இரண்டு முறை வென்ற 10 பேரில் ஒருவர். அவர் அக்டோபர் 2024 மற்றும் ஜனவரி 2021-ல் இந்த பெரிய பரிசை வென்றார். சரஃபின் அதிர்ஷ்டம் துபாய் ட்யூட்டி ஃப்ரீயில் அதோடு நிற்கவில்லை, டிசம்பர் 2023-ல், அவர் Dh 40,000 (ரூ 9.4 லட்சம்) மதிப்புள்ள மற்றொரு பரிசு அட்டையையும் வென்றார்.

மேலும், எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மேலும் டிக்கெட்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளதால், சரஃப்பின் வெற்றிப் பட்டியல் மேலும் வளர அதிக வாய்ப்புள்ளது.

mercedes winner
துபாய் ட்யூட்டி ஃப்ரீ வாராந்திர குலுக்கல்.. Photograph: (Photo: Dubai Duty Free)
Advertisment
Advertisements

1 மில்லியன் அமெரிக்க டாலரை வென்ற இந்தியர்

இந்த வாரம் அதிர்ஷ்டசாலியான ஒரே இந்தியர் அவர் மட்டும் அல்ல. கேரளாவைச் சேர்ந்த 37 வயதான அப்துல் ரஹ்மான் கே, புதன்கிழமை மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 516 குலுக்கலில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற பெரிய பரிசை வென்றார்.

ஷார்ஜாவில் ஒரு சில்லறை வர்த்தக நிறுவனத்தில் விற்பனை உதவியாளராக பணிபுரியும் மூன்று குழந்தைகளின் தந்தையான அவர், தனது ஒன்பது நண்பர்களுடன் டிக்கெட்டின் விலையைப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் 10 பேரும் 2010 முதல் இந்த குலுக்கலில் பங்கேற்று, ஒவ்வொரு சீரிஸுக்கும் டிக்கெட்டில் பெயரை மாற்றி மாற்றி போட்டுள்ளனர்.

பரிசு சரியான நேரத்தில் வந்துள்ளது, என்று அவர் கூறினார். "என் இரண்டு மகள்களும் இந்த மாதம் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள், இப்போது கொண்டாட எங்களுக்கு இன்னும் ஒரு காரணம் கிடைத்துள்ளது... இது ஆச்சரியமாக இருக்கிறது!"

சூப்பர்பைக்குகளை வென்ற இரண்டு இந்தியர்கள்

கலீஜ் டைம்ஸ் படி, மேலும் இரண்டு இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்ட வாரமாக இருந்தது. உம்மல் குவைனில் வசிக்கும் 41 வயதான ஷஃபீக் நசருதீன் என்பவர் BMW F 900 GS அட்வென்ச்சர் மோட்டார் பைக்கை வென்றார், அதே நேரத்தில் அபுதாபியில் வசிக்கும் ஒலாவோ ஃபெர்னாண்டஸ் டுவெகாட்டி பனிகேல் V2 (சிவப்பு) மோட்டார் பைக்கை வென்றார்.

துபாய் ட்யூட்டி ஃப்ரீ குலுக்கலில் 61 வயதான இந்த இந்தியர் மோட்டார் பைக்கை வென்றது இது இரண்டாவது முறை. செப்டம்பரில், ஒலாவோ ஏப்ரிலியா RSV4 1100 மோட்டார் பைக்கை வென்றார்.

Dubai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: