அமெரிக்காவில் உள்ள சான் மேடியோ வீட்டில் நான்கு பேர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் இறந்து கிடந்ததாக என்.பி.சி பே ஏரியா தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Indian-origin couple, twins found dead in US home
இறந்தவர்களின் அடையாளங்களை சான் மேடியோ காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், என்.பி.சி அறிக்கை, அவர்கள் ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது மனைவி ஆலிஸ் பென்சிகர் மற்றும் அவர்களது 4 வயது இரட்டைச் சிறுவர்கள் என நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. 4 பேரும் திங்கட்கிழமை அவர்களது இல்லத்தில் இறந்து கிடந்தனர்.
போலீஸார் அறிக்கையின்படி, சான் மேடியோ போலீஸ் அதிகாரிகள் நலன்புரி சோதனை அறிக்கையின் பேரில் அலமேடா டி லாஸ் புல்காஸின் 4100 தொகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து யாரும் பதில் அளிக்காததால், பூட்டப்படாத ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார், உள்ளே நான்கு பேர் இறந்து கிடந்ததைக் கண்டனர். காவல் துறையினர் சுற்றுப்புறத்தைத் தேடினர் ஆனால் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை.
சிறுவர்கள் படுக்கையறைக்குள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்படுவதாகவும் போலீஸ் அறிக்கை கூறுகிறது. என்.பி.சி பே ஏரியா அறிக்கையின்படி, சிறுவர்களை அடக்கி, கழுத்தை நெரித்து அல்லது அதிக அளவு மருந்து கொடுக்கப்பட்டதால் இறந்திருக்கலாம் என போலீசார் நம்புவதாக விசாரணையை நேரடியாக அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குளியலறைக்குள் தம்பதியர் கண்டெடுக்கப்பட்டதாகவும், குளியலறையில் 9 மில்லிமீட்டர் துப்பாக்கி மற்றும் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
போலீசாரின் அறிக்கையின்படி, சம்பவத்திற்கு பொறுப்பான நபர் வீட்டிற்குள்ளேயே இருப்பதாக போலீசார் நம்புவதால், இது பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகத் தோன்றுகிறது.
சம்பவ இடத்தில் எந்த குறிப்பும் இல்லை, இந்த கட்டத்தில், காவல்துறையால் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று என்.பி.சி அறிக்கை கூறியது.
சான் மேடியோ காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CIB) தற்போது வழக்கை விசாரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“