Indian origin dr Meenal Viz stages a protest outside British PM's office : பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் இந்திய வம்சாவளி மருத்துவர் மீனாள் விஸ், இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் 10 டவ்னிங் ஸ்ட்ரீடில், அலுவலகத்திற்கு முன்பு ”மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்” என்று பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
Advertisment
6 மாத கர்ப்பிணியாக இருக்கும் மீனாளின் போராட்டம், பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேசனால் நடத்தப்பட்டது. மருத்துவமனை சீருடை அணிந்து அவர் நடத்திய போராட்டம் பெரும் விவாத பொருளாக அமைந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு கேள்விகளை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மருத்துவ துறைக்கு பெரும் சவாலாய் இருந்து வருகிறது கொரோனா வைரஸ். பல்வேறு நாடுகளில் மருத்துவர்களை காக்கவே போதுமான முன்னேற்பாடுகள் இல்லை. இந்நிலையில் நோயாளிகளின் நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வண்ணம் உள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு வீடுகள் மறுக்கப்படுவது, தாக்குதல் நடத்தப்படுவது, வீட்டில் இருந்து வெளியேற்றுதல் போன்ற நிகழ்வுகளை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
பல்வேறு நாடுகளில் மருத்துவர்களுக்கு என்95 மாஸ்க்குகள், ஹஸ்மட் சூட்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றாக்குறையாகவே இருக்கிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறையாலும் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”