Advertisment

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மோட்டல் ஓனர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை; தொடரும் இந்தியர்களின் மரணங்கள்

author-image
WebDesk
New Update
usa police

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

PTI

Advertisment

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 76 வயதான இந்திய வம்சாவளி மோட்டல் உரிமையாளர் ஒருவர் வாடகை அறை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வாடிக்கையாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார், இது அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சோக சம்பவங்களின் வரிசையில் சமீபத்தியது.

ஆங்கிலத்தில் படிக்க: Indian-origin elderly motel owner shot dead in US

ஷெஃபீல்டில் உள்ள ஹில்கிரெஸ்ட் மோட்டலுக்குச் சொந்தமான பிரவின் ராவ்ஜிபாய் படேல் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஷெஃபீல்ட் காவல்துறைத் தலைவர் ரிக்கி டெர்ரி தெரிவித்துள்ளார். 34 வயதான வில்லியம் ஜெர்மி மூர், பிரவின் ராவ்ஜிபாய் படேலைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டார் என்று ஹன்ட்ஸ்வில்லியில் உள்ள ஒரு தொலைக்காட்சியான WAFF TV தெரிவித்துள்ளது.

வில்லியம் ஜெர்மி மூர் அறையை வாடகைக்கு எடுப்பதற்காக மோட்டலுக்கு வந்தபோது ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மி மூர் துப்பாக்கியை இழுத்து பிரவின் பட்டேலை சுட்டார், என்று ரிக்கி டெர்ரி கூறினார்.

"ஜெர்மி மூர் 13 வது அவென்யூவில் ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்குள் நுழைய முயன்றபோது ஷெஃபீல்ட் காவல்துறையினரால் விரைவாகக் கைது செய்யப்பட்டார்," என்று காவல்துறை தலைவர் கூறினார்.

ஜெர்மி மூரை சோதனையிட்டப்போது, ​​அவர் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் கிடைத்தது.

பிரவின் படேல் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் ஜெர்மி மூரை வெளியேற்ற முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் திரும்பி பிரவின் படேலின் மார்பில் இரண்டு முறை சுட்டதும் ஜெர்மி மூர் வெளியேறத் தொடங்கினார்.

அந்த தெருவில் வேலை செய்யும் முடிதிருத்தும் தொழிலாளியான ஜெமரிஸ் ஓவன்ஸ், பின்விளைவுகளுக்கு சாட்சி கொடுத்தார். "நான் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டேன்," என்று ஓவன்ஸ் பதற்றத்துடன் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை; அவர் தனது வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார்,” என்று ஓவன்ஸ் கூறினார்.

ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (AAHOA) ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் ஹோட்டல் உரிமையாளர்கள் ஒரு சிறு வணிக உரிமையாளருக்கு எதிரான இந்த அர்த்தமற்ற வன்முறைச் செயலால் அவரது உயிரைப் பறித்ததற்காக ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் மற்றும் சீற்றமும் அடைந்துள்ளனர்.

"எங்கள் சமூகங்களில் விவேகமற்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை, மேலும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட பிரவின் குடும்பத்திற்காக எங்கள் இதயங்கள் உடைந்து போகின்றன" என்று AAHOA தலைவர் பாரத் படேல் கூறினார்.

"பிரவினின் குடும்பத்திற்கு நடந்தது எந்த குடும்பத்திற்கும் நடக்கக்கூடாது, அவரை அறிந்த மற்றும் நேசித்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்," என்று AAHOA அலபாமா பிராந்திய இயக்குனர் சஞ்சய் எம். படேல் கூறினார். மேலும், பிரவின் படேல் ஷெஃபீல்ட் நகரில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அதே மோட்டலை சொந்தமாக வைத்து இயக்கி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

"அவர் மிகவும் குடும்பம் சார்ந்த நபர், ஜாலி மற்றும் ஆர்வமுள்ள தொழிலதிபர்" என்று சஞ்சய் கூறினார்.

40-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அங்கு இருந்த பிறகு, நகரத்தில் உள்ள அனைவரும் அவரை சமூகத்தில் பழக்கமான முகமாக அறிந்தனர், மேலும் குடும்பம் உண்மையான மற்றும் அக்கறையுள்ளவராக சமூகத்தில் நன்கு அறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரவின் படேல் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அலபாமா அதிகாரிகள் உதவுவார்கள் என்று AAHOA நம்பிக்கை கொண்டுள்ளது.

சமீபத்திய மாதங்களில் நாட்டில் இந்திய அல்லது இந்திய-அமெரிக்கர்களின் மரணங்கள் தொடர்கின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அவர்களின் 4 வயது இரட்டைக் குழந்தைகள் உட்பட, கலிபோர்னியாவில் உள்ள அவர்களது வீட்டில் திங்கள்கிழமை இறந்து கிடந்தது காவல்துறையினரால் கொலை-தற்கொலை என வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

பிப்ரவரி 10 அன்று, வாஷிங்டனில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்த தாக்குதலின் போது 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐ.டி நிர்வாகி ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களால் இறந்தார்.

இதற்கு முன், சிகாகோவில் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்.

முன்னதாக, ஜார்ஜியா மாநிலத்தின் லித்தோனியா நகரில் 25 வயதான இந்திய மாணவர் விவேக் சைனி வீடற்ற போதைக்கு அடிமையான ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மற்றொரு மாணவர் 19 வயதான ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் ஓஹியோவில் இறந்து கிடந்தார். இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் கொலைக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

பர்டூ பல்கலைக்கழகத்தில் 23 வயதான இந்திய-அமெரிக்க மாணவர் சமீர் காமத், பிப்ரவரி 5 அன்று இண்டியானாவில் உள்ள இயற்கைப் பாதுகாப்பு பகுதியில் இறந்து கிடந்தார்.

இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் நீல் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்ட மற்றொரு இந்திய மாணவர் ஜனவரி 28 அன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் 18 வயதான அகுல் பி தவான், கடந்த மாதம் தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் இறந்து கிடந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment