ரிஷி சுனக் செவ்வாயன்று இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக ஆனார், பின்னர் அரசாங்கத்தை அமைக்க மன்னர் மூன்றாம் சார்லஸால் அழைக்கப்பட்டார். லிஸ் டிரஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை ரிஷி சுனக் சந்தித்தார்.
செவ்வாயன்று ரிஷி சுனக் தனது முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் செய்த தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டதாகக் கூறினார், மேலும் "ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை" சமாளிக்க நாடு கடினமான முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரிஷி சுனக் எச்சரித்தார்.
இதையும் படியுங்கள்: முன்னாள் அதிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கு; 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 3 இலங்கை தமிழர்கள் விடுவிப்பு
42 வயதான முதலீட்டு வங்கியாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரிஷி சுனக் பஞ்சாபி காத்ரி குடும்பத்தில் இருந்து வந்தவர் மற்றும் அவரது தந்தைவழி தாத்தா இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு குஜ்ரன்வாலாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். குஜ்ரன்வாலா இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பின்னர், ரிஷி சுனக்கின் தந்தை இங்கிலாந்து சென்றார்.
ரிஷி சுனக் தனது போட்டியாளர்களான முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மோர்டான்ட் ஆகியோர் போட்டியில் இருந்து விலகியதால், கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் இயல்பாகவே வெற்றி பெற்று பிரதமர் நாற்காலிக்கு வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்தியா-இங்கிலாந்து உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்ற அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறினார். ரிஷி சுனக்கின் மாமனாரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான என்.ஆர் நாராயண மூர்த்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ரிஷி சுனக் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்துள்ளார். தம்பதியருக்கு கிருஷ்ணா, 11, மற்றும் அனுஷ்கா, 9 ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil