சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு தாய்மொழியை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து இந்திய வம்சாவளி சிங்கப்பூர் அமைச்சர் இந்திராணி ராஜா குரல் கொடுத்துள்ளார். மேலும், அவர் தாய்மொழி தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் தமிழ் மொழியின் செழுமையான பாரம்பரியத்தை நிலைநிறுத்த தமிழ் மொழி பேரவை (டி.எல்.சி) கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் மொழி விழாவை (டி.எல்.எஃப்) நடத்தி வருகிறது. சிங்கப்பூர் அமைச்சர் இந்திராணி ராஜா கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டு டி.எல்.எஃப் விழாவைத் தொடங்கினார்.
சிங்கப்பூர்க் கல்வி முறையானது, இந்தி, உருது, பஞ்சாபி மற்றும் பிற முக்கிய இந்திய மொழிகள் மற்றும் தமிழ், மலாய் மற்றும் சீனம் (மாண்டரின்) ஆகிய மொழிகளை உள்ளடக்கிய பள்ளிகளில் தாய்மொழியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க ஊக்குவிக்கிறது.
சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, “எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை தொடர்ந்து வெளிப்படுத்த வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அண்மையில், சிங்கப்பூர் அமைச்சர் இந்திராணி ராஜா, அனைத்து தமிழ் மக்களையும் இணைக்கும் ‘பாஸ்போர்ட்டாக’ தமிழ் மொழி செயல்படுகிறது என்று கூறிருந்தார்.
மேலும், “மொழியை ஒரு உயிருள்ள பாடமாக கற்க வேண்டும், இது நீங்கள் படிக்கக்கூடிய ஒன்றல்ல, மொழியைப் பயன்படுத்த வேண்டும்” என்று இந்திராணி ராஜா கூறினார்.
“தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் அல்லது அச்சு ஊடகங்கள் மூலமாக அவர்கள் சிறுவயதில் இருந்து மொழியைக் கேட்பது, கவனிப்பது, மற்றும் பயன்படுத்துவது வரை, நாம் அதை உயிருடன் வைத்திருக்க முடியும்” என்று இந்திராணி ராஜா கூறியதாக வெள்ளிக்கிழமை வார இதழான தபலா தெரிவித்துள்ளது.
முன்னதாக, அனைத்து தலைமுறையினரும் தங்கள் தாய்மொழியுடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தையும், அதையொட்டி, அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்தையும் சிங்கப்பூர் அமைச்சர் இந்திராணி ராஜா வலியுறுத்தினார்.
இது குறித்து டி.எல்.சி தலைவர் எஸ். மனோகரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் கூட்டு பலத்தைப் பயன்படுத்தி புதுமையான திட்டங்களை உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு தீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தமிழ்மொழி விழாக்களின் 65 சதவீதத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கிய முயற்சிகள் மூலம் இளைஞர்களிடையே தமிழ் மொழி மீதான ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“