ஜப்பான் உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்ற இந்தியர்!

1997-ல் ஜப்பானுக்கு வந்த யோகேந்திரா வங்கியிலும் வேறு சில நிறுவனங்களிலும் பணி புரிந்தார்.

Puranik Yogendra

ஜப்பானில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜப்பானில் கடந்த 21-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 2,26,561 வாக்குகள் பதிவானது.

அங்குள்ள எடோகோவா வார்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 6,447. இதன் மூலம் ஜப்பான் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் யோகேந்திரா.

Indian Origin Puranik Yogi Wins Japan Ward Election

அரசமைப்பு ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்ற இவர், ’ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் பாலமாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

1997-ல் ஜப்பானுக்கு வந்த யோகேந்திரா வங்கியிலும் வேறு சில நிறுவனங்களிலும் பணி புரிந்தார். பின்னர் 2005-லிருந்து எடோகோவா வார்டில் வசித்து வருகிறார்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian origin yogi puranik wins ward election at japan

Next Story
ஃபிரான்ஸின் மிக இளவயது அதிபர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com