கலிபோர்னியாவில், பஞ்சாபை சேர்ந்த 21 வயதான இந்திய மாணவன் நான்கு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கொள்ளையர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.
தாரம்பிரீத் சிங் ஜெசர். கணக்கியல் மாணவரான இவர் மூன்று வருடத்திற்கு முன்பு மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். கலிபோர்னியா பிரெச்னோ நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் பணிபுரிந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் பணியில் இருந்தப்பொழுது கொள்ளையர்கள் கடையை முற்றுகையிட்டனர். உள்ளூர் தினசரி நாளிதழின் தரும் தகவலின் படி, கொள்ளையர்களின் வரவை கண்ட ஜெசர் உடனடியாக மேசை கீழ் ஒளிந்துக்கொண்டார். இருப்பினும் அவரை கண்ட கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணம் மற்றும் பொருள்களை எடுத்துச்சென்றனர்.
அதன் பின் வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜெசரின் இறந்த உடலை கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கொள்ளையர்களின் ஒருவராக சந்தேகித்து 22 வயதான இந்தியாவை சேர்ந்த அத்வல் என்பவரை கலிபோர்னியா காவல் துறை கைது செய்துள்ளது.
அத்வல், கொள்ளை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். “பாதிக்கப்பட்ட ஜெசர் முற்றிலும் ஒரு அப்பாவி, தன் வேலையை செய்து கொண்டிருந்த ஒருவரை கொள்ளையர்கள் முட்டாள்தனமாக கொன்றுவிட்டனர்” என்றார் மதரா ஷெரீஃப் ஜே வார்னி. சரமாரியாக சுட்டதில், ஒரு குண்டு ஜெசர் மீது பாய்ந்துவிட்டது.
போலீசார் மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்வை கேள்விப்பட்ட பஞ்சாப் முதல் அமைச்சர் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். “தாரம்பிரீத் சிங் ஜெசரின் கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது” என ட்வீட் செய்திருந்தார். மேலும் வெளியுறவு துரை அமைச்சர், சுஷ்மா ஸ்வராஜெய் இதில் தலையிட்டு ஜெசர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.