Advertisment

உக்ரைனின் சுமியில் காத்திருக்கும் மாணவர்களின் நிலை என்ன?

தண்ணீர் விநியோகம் துண்டிப்பு, மின்சார விநியோக தடை ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
உக்ரைனின் சுமியில் காத்திருக்கும் மாணவர்களின் நிலை என்ன?

உக்ரைனின் சுமி நகரில் உள்ள 700 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதற்கான பணிகள் இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதற்காக இந்தியத் தூதரக குழு பொல்டாவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு நகரமான சுமி ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது. இங்கு மருத்துவ மாணவர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. போர் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த விடுதிகளில் தண்ணீர் விநியோகம் துண்டிப்பு, மின்சார விநியோக தடை ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அந்த வீடியோவில் உருக்கமாக பேசிய அவர்கள் எங்கள் மீட்க யாரும் வரவில்லை. நாங்கள் நடந்தே ரஷ்ய எல்லைக்குச் செல்ல இருக்கிறோம்.

இதுவே எங்களின் கடைசி வீடியோவாகக் கூட இருக்கலாம். எங்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு முழு பொறுப்பையும் இந்தியத் தூதரகம் தான் ஏற்க வேண்டும் என்று வருத்தத்துடன் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் மாணவர்களை தொடர்பு கொண்டு உங்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அதுவரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்க இந்திய அரசு தூதரக குழு ஒன்றை பொல்டாவா நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

 மேலும், பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்கள் விவரங்களை கூகுள் படிவங்களில் உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ளுமாறும் இநத்ியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சுமி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் தங்கியிருக்கும் ஜோசப் என்பவர் கூறுகையில், முன்பு கணக்கிட்டபடி 800 இந்திய மாணவர்கள் இங்கு தங்கி இருக்கவில்லை. சுமார் 600 மாணவர்கள் தான் இருப்பார்கள். அவர்களில் பாதி பேர் கூகுள் படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்துவிட்டனர்.

‘என்னால் சும்மா நிற்க முடியாது’ உக்ரைன் போரில் இணைந்த அமெரிக்க மூத்த வீரர்கள்

அனைவரும் மீட்பது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் நிலைமை மிகவும் மோசாக இருக்கிறது. ஆனால், இந்தியத் தூதரகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதை அறிகிறோம். இதை மாணவர்களிடமும் தெரியப்படுத்திவிட்டோம் என்றார் ஜோசப்.

இதுவரை 76 விமானங்களில் சுமார் 16,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Written by Shubhajit Roy , Jayprakash S Naidu 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment