நேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. 2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 5,20,000 வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவிற்காக வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
96,372 இந்தியர்கள், 71,379 சீனர்கள், 43,816 அமெரிக்கர்கள், மற்றும் 13, 851 ஜப்பானியர்கள் இதுவரை பயணம் செய்துள்ளார்கள்.
கடந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கையை விட இந்த வருடம் சுமார் 13% அதிக பயணிகள் நேபாளத்திற்கு வருகை தந்துள்ளார்கள். கடந்த வருடம் நேபாளம் சென்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4,60,304 ஆகும்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, போலாந்து, ஸ்வீடன் நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
நேபாளம் சுற்றுலாத் துறை அளித்த தகவலின் படி சுமார் 17.1% சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை புரிபவர்கள் ஆவார்கள். 11% சீனர்கள், 8.44% அமெரிக்கர்கள் நேபாளத்திற்கு இந்த வருடம் பயணித்திருக்கிறார்கள்.
புத்தரின் பிறந்த இடமான லும்பினிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று அத்தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.