India’s A-SAT Test : இந்தியாவின் ஏசாட் சோதனையால் விண்வெளியில் குப்பை உருவாக்கி இருப்பதாகவும், இதனால் இனி வெண்வெளி செல்லும் வீரர்களுக்கும், ஏற்கனவே வெண்வெளியில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏசாட் சோதனை:
விண்ணில் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் இந்தியாவின் ஏசாட் சோதனையால் விண்வெளியில் குப்பைகள் உருவாகியுள்ளதாம். கடந்த 27 ஆம் தேதி செயல் பாட்டில் இருந்த ஒரு செயற்கைக்கோள் ஏசாட் சோதனை மூலம் தாக்கி அழித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். இது அனைவரும் பெருமைக் கொள்ளும் தருணம் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா நடத்திய ஏசாட் சோதனையால் விண்வெளியில் தற்போது என்ன நடக்கிறது? என்பது குறித்து நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
400 க்கும் மேற்பட்ட பாகங்களின் சிதறல்களாக குப்பைகளாக மாறி வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாசா , இந்த குப்பைகள் எதிர்கால மனித விண்வெளி பயணத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பயணம் மேற்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு இந்த குப்பைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசாட் சோதனையானது மிகவும் தாழ்வான நிலையில் நடத்தப்பட்டாலும் அதன் மூலம் சிதைந்த சிறு சிறு பாகங்கள் மேல் பகுதிக்கு மிதந்து வந்து குப்பைகளாக சேர்ந்துள்ளதாக நாசா விவரித்துள்ளது. இதனால் விண்வெளிக்கு இனி பயணம் செய்யப்போகும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து பேசிய நாசாவின் தலைவர் ஜிம் பிரைடன்ஸ்டைன் , “விண்வெளியில் சிதைவுகளை ஏற்படுத்தி ,குப்பைகளை ஏற்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்றும், இதனால் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு” என்றும் தெரிவித்துள்ளார்.