இந்தோனேசியாவில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 55க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதை அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது. 40க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
Advertisment
லமேனேலே பகுதியை சுற்றியிருக்கும் மலைப்பகுதியில் இருந்து அடித்துவரப்பட்ட மண் அந்த கிராமத்தின் வீடுகளை சூழந்த நிலையில் அந்த நிலச்சரிவில் சிக்கி 38 நபர்கள் பலியாகியுள்ளனர் என்று லென்னி ஓலா கூறியுள்ளார். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற பேரிடர்களில் சிக்கி மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். 42 நபர்களை காணவில்லை. பேரிடர் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் மின்சார வசதி, சாலை போக்குவரத்து ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் மூன்று பேர் உடல் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. முழுமையாக 40 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வைபுராக் கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த நான்கு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை ஏற்பட்ட கடும் மழைப்பொழிவு காரணமாக இந்த மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. லெம்பாட்டா தீவு பகுதியில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 16 நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான லாவா எரிமலைக்கு வெளியே அப்படி இருந்தது. இன்று காலை பெய்த மழையால் குளிர்ந்த லாவா அப்படியே அடித்து செல்லப்பட்டு இந்த பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil