/tamil-ie/media/media_files/uploads/2022/10/Indonesia_Soccer_Incident_82109.jpg)
இந்தோனேசியாவில் நடந்த ஒரு கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 180 பேர் காயமடைந்தனர், இது உலகின் மிக மோசமான ஸ்டேடியம் பேரழிவுகளில் ஒன்றாகத் தோன்றுகிறது என ஞாயிற்றுக்கிழமை போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஆடுகளத்தில் தோல்வியடைந்த உள்ளூர் அணி ஆதரவாளர்கள் படையெடுத்த போது, காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர், அதன் காரணமாக கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று கிழக்கு ஜாவா காவல்துறை தலைவர் நிகோ அஃபின்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: ஆப்கானில் கல்வி நிறுவனம் மீது பயங்கரவாத தாக்குதல்; இந்தியா கண்டனம்
"ஆதரவாளர்களின் செயல் அராஜகமாகிவிட்டது. அவர்கள் அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர், அவர்கள் கார்களை சேதப்படுத்தினர், ரசிகர்கள் வெளியேறும் வாயிலுக்கு ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது” என்று நிகோ கூறினார்.
அரேமா கால்பந்து அணி பெர்செபயா சுரபயா அணியிடம் தோற்ற பிறகு, உள்ளூர் செய்தி சேனல்களின் வீடியோ காட்சிகளில் ரசிகர்கள் மலாங்கில் உள்ள மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்டதை காட்டுகின்றன. காற்றில் கண்ணீர்ப்புகை வீசப்பட்டதைக் கொண்டு சண்டை சச்சரவுகளைக் காணலாம்.
BREAKING: Over 100 people were killed and 200 injured in a riot at a football stadium in Malang Indonesia, authorities said. #news #BreakingNews #Newsnight #NewsUpdate #NewsBreak #soccer #Indonesia #malang#AremavsPersebaya#arema #Kanjuruhan #bonekjancok #football pic.twitter.com/SXhCPfTId9
— That Guy Shane (@ProfanityNewz) October 1, 2022
சுயநினைவை இழந்தவர்கள் போல் தோன்றியவர்கள் மற்ற ரசிகர்களால் தூக்கிச் செல்லப்படுவதை படங்கள் காட்டுகின்றன.
உலகக் கால்பந்தாட்டத்தின் நிர்வாகக் குழுவான FIFA அதன் பாதுகாப்பு விதிமுறைகளில் துப்பாக்கிகள் அல்லது "கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வாயு" ஆகியவற்றைக் காவலர்கள் அல்லது காவல்துறையினரால் எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ கூடாது என்று குறிப்பிடுகிறது.
கிழக்கு ஜாவா காவல்துறை அத்தகைய விதிமுறைகள் பற்றி அறிந்திருக்கிறதா என்பது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
#WATCH | At least 127 people died after violence at a football match in Indonesia, last night. The deaths occurred when angry fans invaded a football pitch after a match in East Java
— ANI (@ANI) October 2, 2022
(Video source: Reuters) pic.twitter.com/j7Bet6f9mE
இந்தோனேசியாவின் மனித உரிமைகள் ஆணையம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் உட்பட மைதானத்தின் பாதுகாப்பை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் ஆணையர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரி மஹ்ஃபுட் எம்.டி, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், அரங்கம் அதன் திறனுக்கு அப்பால் நிரம்பியிருந்தது. 38,000 பேர் மட்டுமே அமரக்கூடிய மைதானத்திற்கு 42,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக கூறினார்.
இந்தோனேசியாவில் நடைபெறும் போட்டிகளில் இதற்கு முன்னரும் சிக்கல்கள் வெடித்துள்ளன, கிளப்புகளுக்கு இடையேயான வலுவான போட்டிகள் சில நேரங்களில் ஆதரவாளர்களிடையே வன்முறைக்கு வழிவகுக்கும்.
இந்தோனேசியாவின் விளையாட்டு மந்திரி ஜைனுடின் அமலி, KompasTV இடம், மைதானங்களில் பார்வையாளர்களை அனுமதிக்காதது உட்பட கால்பந்து போட்டிகளில் பாதுகாப்பை அமைச்சகம் மறு மதிப்பீடு செய்யும் என்று கூறினார்.
இந்தோனேசிய டாப் லீக் BRI லிகா 1 போட்டிகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஸ்டேடியம் பேரழிவுகளில், ஷெஃபீல்டில் உள்ள ஹில்ஸ்பரோ ஸ்டேடியத்தில் நெரிசலான மற்றும் வேலிகளால் சூழப்பட்ட ஒரு உறை இடிந்து விழுந்ததையடுத்து, 96 லிவர்பூல் ஆதரவாளர்கள் பிரித்தானியாவில் ஏப்ரல் 1989 இல் உயிரிழந்தனர்.
அடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஃபிஃபா 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தோனேசியா நடத்த உள்ளது. சீனா போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்து வெளியேறிய பிறகு, அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்த ஏலம் எடுக்கும் மூன்று நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.