இந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு…

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது

Indonesia tsunami, இந்தோனேசியா சுனாமி
Indonesia tsunami, இந்தோனேசியா சுனாமி

Indonesia tsunami : கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதில் பலியானோர், காயமடைந்தவர்கள் மற்றும் மாயமானவர்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 281 ஆக அதிகரித்துள்ளது. 843 படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 பேர் மாயமாகி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Indonesia tsunami : இந்தோனேசியா சுனாமி கூடுதல் விவரம்

சனிக்கிழமை இரவு சரியாக 09.30 மணிக்கு, ஆழிப் பேரலை என்றழைக்கப்படும் சுனாமி இந்தோனேசியா தீவினை தாக்கியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் க்ராகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதின் விளைவாக சுனாமி ஏற்பட்ட்டுள்ளது. சுந்தா ஸ்ட்ரைட், பண்டங்க்ளாங், செராங், மற்றும் தெற்கு லம்பூங் கடற்கரை பகுதிகளும் சுனாமியில் பெருத்த பாதிப்பினை சந்தித்துள்ளது. சுமார் 281 பேர் பலியாகி இருப்பதாகவும், 843 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 28 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் விளைவாக 13 நாடுகள் பெரும் இழப்பினை சந்தித்தன. அப்போதும், இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 1,20,000 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போதும் அப்படியான ஒரு சூழல் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள், முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிறைய நபர்களை காணவில்லை என்ற தகவல்களும் பரவி வருகிறது.

Indonesia tsunami : சுனாமி ஏற்பட்ட போது  பதிவான வீடியோ காட்சிகள்

செவண்டீன் பேண்ட் என்ற இசைக்குழு நேற்று பெண்டல்காங் என்ற பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தது. அந்த நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே, சுனாமி வந்ததால், அந்நிகழ்வுகள் எல்லாம் தொடர்ச்சியாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

2004ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட சுனாமி என்பதால், மக்கள் துரித  கதியில் மீட்புப் பணிகளில் இறங்கி வருகின்றார்கள்.

வெடித்துச் சிதறும் எரிமலை

Indonesia tsunami புகைப்படத் தொகுப்பு

Indonesia tsunami, Tsunami in Indonesia Photos and videos,
சேதாரத்திற்கு உள்ளான பகுதிகள்
Indonesia tsunami, Tsunami in Indonesia Photos and videos,
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மக்கள்
Indonesia tsunami, Tsunami in Indonesia Photos and videos,
இறந்தவர்களை அப்புறப்படுத்தும் பொதுப்பணித்துறை ஊழியர்கள்

Indonesia tsunami, Tsunami in Indonesia Photos and videos,

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indonesia tsunami 43 dead over 500 injured on islands of java and sumatra

Next Story
முடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்புRanil Wickremesinghe, ரணில் விக்ரமசிங்கே
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com