இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்
இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமிக்க ஒப்புதல் அளித்ததில் இங்கிலாந்து ராணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
தொழிலதிபதி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தில் அரசியல்வாதியாகவும் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, ரிஷி சுனக்கை பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்துள்ளார். இதன் மூலம் இவர் பிரிட்டனின் உள்துறை செயலர் பிரிதி படேலுடன் பிரிட்டன் உயர் மட்ட நிர்வாகத்தில் இணைகிறார்.
முன்னதாக, பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த சஜித் ஜாவித் சான்சலர் பதவியை ராஜினாமா செய்தார். இது டிசம்பர் 2019 பொதுத் தேர்தலில் ஜான்சன் பெரும்பான்மையைப் பெற்றதிலிருந்து எடுக்கப்பட்ட மிகப்பெரிய அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
அவருக்கு பதிலாக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை கருவூலத்தின் தலைமை செயலாளராக ஜாவித்தின் ஜூனியராக இருந்தார். இப்போது, அமைச்சரவைக்கு உயரும் நட்சத்திரமாகக் காணப்படுகிறார்.
39 வயதான ரிஷி சுனக் நிதியமைச்சராக பிரிட்டன் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள பிரதமர் அலுவலகம் உள்ள எண் 11 டவுனிங் தெருவுக்கு செல்ல உள்ளார்.
ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமிக்க ஒப்புதல் அளித்ததில் இங்கிலாந்து ராணி மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷி சுனக் இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷையரில் ரிச்மண்ட் எம்பியாக இங்கிலாந்து அரசியலுக்குள் நுழைந்து நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா திருமணம் செய்துகொண்டார். தற்போது சுனக் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற ஜான்சனின் மூலோபாயத்தை ஆதரித்த ஒரு தீவிரமான பிரெக்ஸைட்டராக கன்சர்வேடிவ் கட்சி அணிகளை வேகமாக உயர்த்தியுள்ளார்.