International Kissing Day 2018: இன்று சர்வதேச முத்த தினம். 2006ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சரித்திர நிகழ்வில் சில முக்கியத்துவம் வாய்ந்த முத்தங்களும் உண்டு, மிகவும் அழகான முத்தக் காட்சிகளை கொண்ட திரைப்படங்களும் உண்டு. நினைவில் ஒட்டிக் கொள்ளும் முதல் முத்தத்திற்கு அர்த்தமும் காரணமும் தேவையில்லை தான். இதைப் படிக்கும் போது, உங்கள் உதடுகளில் படியும் புன்னகைக்கு யாரோ காரணமாக இருப்பார்கள்.
முத்தம் என்பது அன்பின், காதலின், நெருக்கத்தின் வெளிப்பாடு. அனைத்து முத்தத்திற்கும் அர்த்தங்கள் தேவையில்லை. ஆனால் அர்த்தப்படும் சில முத்தங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ.
நெற்றி முத்தம்
நெற்றியில் இடப்படும் முத்தம், ஒருவர் உங்கள் மீது அன்பு செலுத்துகின்றார் என்று மட்டும் அர்த்தம் இல்லை. உங்களின் உணர்வுகளையும், உங்களின் எண்ணங்களையும் மதிக்கின்றார்கள் என்று அர்த்தம். இந்த முத்தத்தினை உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரும் உங்களுக்கு தரலாம். அல்லது நீங்கள் உங்களின் பெற்றோருக்கோ, நண்பர்களுக்கோ அன்பின் வெளிப்பாடாக தரலாம்.
International Kissing Day 2018: Fore head Kiss
கன்னத்தில் முத்தமிட்டால் என்ன அர்த்தம்?
கன்னத்தில் முத்தமிடுதல் பரவலாக உலகெங்கிலும் இருக்கும் பழக்கம். வரவேற்பது தொடங்கி வணக்கம் வைப்பது வரை அனைத்திலும் தங்கு தடையின்றி தரப்படுவது கன்னத்து முத்தம். நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், மற்றும் உடன் வேலை செய்பவர்கள் என யாருக்கும் தயக்கமின்றி முகமன் கூறி முத்தமிட இந்த முத்தம் தான் சரி.
International Kissing Day 2018: Peck on the Cheek
கையில் தரப்படும் முத்தத்திற்கு என்ன பொருள்?
ஒருவர் உங்களை விரும்புகிறார் என்றால், அல்லது உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு 'டேட்டிங்கிற்கு’ விருப்பம் தெரிவிக்கிறார் என்றால் அதற்கு கையில் தரப்படும் முத்தம் தான் சரி. உங்களின் ஆண் அல்லது பெண் நண்பர் உங்களின் கையில் முத்தம் தருகிறார் என்றால், உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் நன்றாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம்.
International Kissing Day 2018: Kiss on the hand
உதட்டு முத்தம்
இது காதலின் வெளிப்பாடு. என் உயிருக்கும் மேலாக உன்னை நேசிக்கிறேன் என்பதன் பொருளை தங்களின் துணைகள் உணர்வதற்காக தரப்படுவது. காதலர்கள் மற்றும் கணவன் - மனைவியின் நெருக்கத்தினையும் அன்பினையும் வெளிப்படுத்துவதற்கு தரப்படும் முத்தம் இது.
International Kissing Day 2018: Peck on the lips
ஃப்ரென்ச் முத்தம்
இது ஒரு இணைக்கான நெருக்கத்தினை அதிகப்படுத்தும் முத்தமாகும். ஆசை, தேவை, நெருக்கம் ஆகியவற்றை தன் இணைக்கு தெரிவிப்பதற்காக தரப்படும் முத்தம் ஆகும்.
International Kissing Day 2018: French kiss