இப்படி ஒரு புத்திசாலி தனமா! யாருப்பா நீ? போலீசாரையே திகைக்க வைத்த நபர்!

ஒரே நேரத்தில் 15 டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு நடந்தார்.

Internet viral video
Internet viral video

ஸ்பெயினில் 15 டி- ஷர்ட்டுகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு விமான நிலையத்தில் நுழைந்த நபரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு போகும் சூட்கேஸ் எடையை அதிகாரிகள் எப்போதுமே சோதனை செய்வார்கள். குறிப்பிட்ட எடையை விட அதிகமாக இருந்தால் அதற்கு பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்படும்.

இந்த கட்டணத்திற்கு பயந்து, குடும்ப தலைவர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோஷ் இர்வின் தனது மகன் மற்றும் மனைவியுடன் நீண்ட நாள் சுற்றுலாவாக ஸ்பெயின் சென்றிருந்தார்.

அப்போது, ஸ்பெயினில் அதிகப்படியான டி- ஷர்ட்டுகள் மற்றும் துணிமணிகளை வாங்கி குவித்துள்ளார். சுற்றுலா முடித்துவிட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் போது, விமான நிலையத்தில் அவரின் சூட்கேஸ் அதிகப்படியான எடை கொண்டதாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிகம் பணம் வசூலிப்பார்கள் என்ற பயத்தில், அவர், ஒரே நேரத்தில் 15 டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு நடந்தார்.

இதனால் அவருக்கு அதிகப்படியான வியர்வை வழிந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலைய காவல் அதிகாரிகள் அவரை அழைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது தான் ஜோஷ் செய்த காரியம் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் குலுங்கி குலுக்கி சிரித்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Internet viral video man wears 15 shirts into airport

Next Story
இனி துபாயில் இந்திய ரூபாய் செல்லும்.. சுற்றுலா, வேலைக்கு செல்பவர்களுக்கு நிம்மதியான தகவல்!indian currency
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com