ஈரான் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய பிரதேசத்தில் ஈரான் நேரடி தாக்குதலைத் தொடங்கியது. சிரியாவில் ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் அண்மையில் தாக்குதல் நடத்தியதில் முக்கிய தளபதிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் அண்மையில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய முக்கிய தளபதிகள் புரட்சிகர காவலர் படையின் 2 முக்கிய தளபதிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்காக இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. தொடர்ந்து அமெரிக்காவும் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'ஒருங்கிணைந்த' பதிலுக்காக ஜி7 கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/world/israel-iran-news-live-updates-iran-launches-drones-at-israel-says-israeli-military-9267882/
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் குறித்து விவாதிக்க ஜி7 தலைவர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ளது. வீடியோ கால் மூலம் கூட்டம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நேரப்படி கூட்டம் பிற்பகலில் நடைபெறும் உள்ளது. கூட்டத்தை ஜி7 தலைமை பதவியை வகிக்கும் இத்தாலி நடத்த உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“