டிசம்பர் 23 அன்று அரேபிக் கடலில் குஜராத் கடற்பகுதியில் இரசாயன டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் தீப்பற்றி சேதமடைந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக
அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், ஈரான் இதை இன்று (திங்கட்கிழமை) மறுத்துள்ளது. மேலும், 'அடிப்படை ஆதாரமற்றது' எனவும் கூறியுள்ளது.
தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்று கூறினார். ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் இந்தியப் பெருங்கடலில் கப்பலைத் தாக்கியதாக பென்டகன் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த எதிர்வினை வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 10 மணியளவில் வெராவலிலிருந்து தென்மேற்கே 200 கடல் மைல் தொலைவில் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் தீப்பற்றியது. எனினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கப்பல் சேதமடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஈரானில் இருந்து ஒரு வழி ட்ரோன் தாக்குதல் மூலம் கப்பல் குறிவைக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், “லைபீரியாவின் கொடியுடன், ஜப்பானுக்குச் சொந்தமான மற்றும் நெதர்லாந்தின் இரசாயன டேங்கர்
CHEM PLUTO என்ற மோட்டார் கப்பல் கடந்த (சனிக்கிழமை) இந்தியப் பெருங்கடலில், கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் (GMT காலை 6 மணிக்கு) தாக்கப்பட்டது. இந்திய கடற்கரையில் ஈரானின் ட்ரோன் தாக்குதல் மூலம் குறிவைக்கப்பட்டது என்றார்.
இந்நிலையில், கப்பல் தாக்கப்பட்ட நிலையில், இந்திய கடலோர காவல்படை கப்பல் (ஐசிஜிஎஸ்) விக்ரம் ஞாயிற்றுக்கிழமை காலை அரபிக்கடலில் செம் புளூட்டோவை (CHEM PLUTO) மும்பையை நோக்கி அழைத்துச் சென்றது. இது குறித்து அதிகாரிகள் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம், ணிகக் கப்பல்களைக் கண்காணிக்கவும், கண்காணிப்பை மேற்கொள்ளவும் டோர்னியர் விமானங்களும் அப்பகுதியில் வான்வழி ஆய்வு செய்ததாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“