உக்ரைன் விமானத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கிய நேரடி காட்சிகள் ( வீடியோ)
Iran missiles hit Ukarine plane : ஈரான் வான்பகுதியில், 176 பேர் பயணம் செய்த உக்ரைன் விமானத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கும் நேரடி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் பாக்தாத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. விழுந்து நொருங்கிய விமானத்தில் ஈரான் நாட்டினர் 82 பேர் உள்ளிட்ட 176 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisement
உக்ரைன் விமானம், டெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு ஏவுகணை தாக்கியது. இதில் விமானத்தின் டிராஸ்பாண்டர் பலத்த சேதமடைந்தது. விமானம், கலாஜ் அபாட் பகுதியின் வான்பரப்பில் பறந்துகொண்டிருக்கும்போது இரண்டாவது ஏவுகணை தாக்கியது.
விமானத்தை ஏவுகணைகள் தாக்கும் வீடியோ, பிட்கானே பகுதியில் உள்ள வீட்டின் மேற்பகுதியில் ஒரு வீடியோகிராபர் எடுத்துள்ளார். இந்த பகுதியிலிருந்து ஈரான் ராணுவ தலைமையகம் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெரிவித்திருந்தன.
ஈரான் ஒப்புதல் : மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் ஒப்புக்கொண்டது.
தேதி குழப்பம் : டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் தேதி 2019-10-17 என்று உள்ளது. ஆனால் தாக்குதல் நடந்ததோ 2020 ஜனவரி 8ம் தேதி.. இந்நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், அந்த வீடியோ கேமரா, பெர்சியன் காலண்டர் தான் உள்ளது. பெர்சியன் காலண்டரின் படி அந்த தேதி சரிதான் என்றும், கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் தான் 2020 ஜனவரி 8ம் தேதி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.