ஏர் இந்தியா விமான ஊழியரிடம் நிறவெறியுடன் பேசியதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளை உபயோகித்து பிரச்சனை செய்ததாக சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிமோன் பர்ன்ஸ் மர்மான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்.
2019 ஏப்ரல் மாதம், மும்பை - லண்டன் விமானத்தில் பயணித்த ஐயர்லாந்து வழக்கறிஞர் சிமோன் பர்ன்ஸ், விமான ஊழியரிடம் நிறவெறியை வெளிப்படுத்தியதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த மே 20ம் தேதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜூன்.1ம் தேதி இங்கிலாந்தின் பீச்சி ஹெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிமோன் பர்னஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.