/indian-express-tamil/media/media_files/2025/10/05/gaza-war-stapol-2025-10-05-11-13-25.jpg)
காசாவில் ஒரு ஆரம்ப கட்ட வாபஸ் கோடுக்கு இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போராளிக் குழுவான ஹமாஸ் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் இஸ்ரேலின் இந்த ஆரம்ப கட்ட வாபஸ் கோடுக்கு ஒப்புக்கொண்டால், உடனடியாகவே போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இது குறித்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில், "பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் ஆரம்ப கட்ட வாபஸ் கோடுக்கு சம்மதித்துள்ளது, அதை நாங்கள் ஹமாஸிடம் காட்டியுள்ளோம். இந்த வாபஸ் நடவடிக்கையின் அடுத்த கட்டத்திற்கான நிலைமைகளை நாங்கள் உருவாக்குவோம், இது 3000 ஆண்டுகால இந்த பேரழிவின் முடிவுக்கு நம்மை நெருங்கச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முடிவதற்குள் பணயக்கைதிகளை விடுவித்து, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், "அனைத்து நரகமும் கட்டவிழ்த்து விடப்படும்" என்று ட்ரம்ப் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இந்த திட்டங்கள் குறித்து விவரிக்கையில், சில நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை மட்டுப்படுத்துவதே எங்கள் இலக்கு. ட்ரம்ப் தெளிவாகக் கூறிவிட்டார்: காலத்தைக் கடத்தும் தந்திரங்களையோ அல்லது சாக்குப்போக்குகளையோ நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும், பல கட்டங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை விவரித்த இஸ்ரேலிய பிரதமர், முதலில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், அதே வேளையில் இஸ்ரேலிய இராணுவம் "காசா பகுதிக்குள் ஆழமாக உள்ள அனைத்து ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளின் கட்டுப்பாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும். அதன்பிறகு "ஹமாஸ் ஆயுதக் களையப்பட்டு, காசா இராணுவமயமற்றதாக மாற்றப்படும். இது ட்ரம்ப் திட்டத்தின் மூலம் இராஜதந்திரப் பாதையில் அல்லது இராணுவப் பாதையில் அடையப்படும், என்று கூறியுள்ளார்.
அதேபோல் நாட்டு மக்களுக்காக பேசிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு என் சகோதர சகோதரிகளே, இஸ்ரேலிய குடிமக்களே, நாம் ஒரு மிகப்பெரிய சாதனையின் விளிம்பில் இருக்கிறோம். இது இன்னும் இறுதியாகவில்லை; நாங்கள் இதில் உன்னிப்பாகச் செயல்படுகிறோம் என்று கூறியுள்ளார்.
அனைத்துப் பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ட்ரம்ப், காசா மீதான குண்டுவீச்சை "உடனடியாக நிறுத்த" இஸ்ரேலுக்கு தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். அதில் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியே கொண்டு வர, இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். என்று பதிவிட்டிருந்தார்.
எனினும், காசாவில் குண்டுவீச்சை நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் டஜன் கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 36 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹமாஸ், வெள்ளிக்கிழமை அன்று, ட்ரம்ப்பின் காசா திட்டத்திற்கு பகுதி அளவில் சம்மதம் தெரிவிப்பதாகவும், அதில் போராளிக் குழு அனைத்துப் பணயக்கைதிகளையும் விடுவித்து, அந்தப் பகுதியின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் என்றும் கூறியது. ஆனால் ட்ரம்ப்பின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.