Advertisment

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி ரெடியா? முக்கிய கட்டத்தை அடைந்த இஸ்ரேல் ஆராய்ச்சி!

இந்த மருந்தின் செயல்பாடு முறையாக வெற்றி அடையுமானால், உலகம் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Israel develops key COVID19 antibody

Israel develops key COVID19 antibody

Israel develops key COVID19 antibody : கொரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோயாக உருப்பெற்று வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளில் இருக்கும்  ஆராய்ச்சியாளர்கள் பலரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கா, இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் கூறியிருந்தார். அமெரிக்காவின் பில்கேட்ஸ் அறக்கட்டளை தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக பிரிட்டன் அரசு, ஹார்வர்ட் ஆராய்ச்சி குழுவிற்கு 20 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியிருக்கிறது.

மேலும் படிக்க :ஆக்ஸ்ஃபோர்டின் கொரோனா தடுப்பூசி : பிறந்தநாளன்று தன்னை அர்பணித்த ஆராய்ச்சியாளர்!

இந்நிலையில் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர். (Israel Institute for Biological Research) மோனோக்ளோனல் நியூட்ரிலைஸிங் ஆண்டிபாடியை (Monoclonal antibodies) உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டிபாடிகள் கொரோனா நோயாளியின் உடலுக்குள் சென்று வைரஸ்களை அழிக்க உதவுகிறது என்று அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் நாஃப்தலி பென்னட் (Defence Minister Naftali Bennett) கூறியுள்ளார்.

இந்த ஆண்டிபாடிகள் தயாரிப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கும் பணிகள் தீவிரமடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.  இந்த மருந்தின் செயல்பாடு முறையாக வெற்றி அடையுமானால், உலகம் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment