Advertisment

காசா நகரத்தை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவம்: தொலைத் தொடர்பு துண்டிப்பு

48 மணி நேரத்திற்குள் காசா நகருக்குள் துருப்புக்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
gaza blackout

நவம்பர் 5, 2023 ஞாயிற்றுக்கிழமை, காசா பகுதியில் உள்ள மகாசி அகதிகள் முகாமில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் தப்பியவர்களை தேடும் பாலஸ்தீனியர்கள். (AP புகைப்படம்)

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் மூன்றாவது மொத்த சேவை நிறுத்தத்தில், காசா ஞாயிற்றுக்கிழமை தகவல் தொடர்புகளை இழந்தது. அதே நேரத்தில் இஸ்ரேலின் ராணுவம் காசா நகரத்தை சுற்றி வளைத்தது, முற்றுகையிடப்பட்ட கடலோரப் பகுதியை இரண்டாகப் பிரித்ததாகக் கூறியது.

Advertisment

இன்று வடக்கு காசா மற்றும் தெற்கு காசா உள்ளது, இது ஹமாஸ் போராளிக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் போரில் குறிப்பிடத்தக்க கட்டம், என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ரியர் அட்மிரல் (Rear Adm.), டேனியல் ஹகாரி செய்தியாளர்களிடம் கூறினார்,

48 மணி நேரத்திற்குள் காசா நகருக்குள் துருப்புக்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா முழுவதும் "இணைய சேவை துண்டிப்பு", ராணுவத் தாக்குதலின் புதிய கட்டத்தின் விவரங்களைத் தெரிவிப்பதை இன்னும் சிக்கலாக்கியது.

கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண (UNRWA) குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுடன் நாங்கள் தொடர்பை இழந்துவிட்டோம், என்று ஐ.நா.  பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காசாவில் தொலைத் தொடர்பு, மின்சாரம் மற்றும் பிற சேவைகள் துண்டிப்பு 36 மணிநேரம் நீடித்தது, இரண்டாவது சில மணிநேரங்கள் நீடித்தது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவில் இரண்டு அகதிகள் முகாம்களைத் தாக்கியதில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இங்குதான் இஸ்ரேலின் ராணுவம் பாலஸ்தீனிய குடிமக்களை தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தியது என்று, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசாவில் ஏறக்குறைய ஒரு மாத காலப் போரில் 9,700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 4,000 க்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் சிறார்கள் என்று காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய துருப்புக்கள் மக்கள் அடர்த்தி நிறைந்த நகர்ப்புறங்களுக்கு முன்னேறும்போது அந்த எண்ணிக்கை உயரும்.

மகாசி அகதிகள் முகாமில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகாமில் வசிக்கும் அராஃபத் அபு மஷாயா, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் பல அடுக்கு மாடி வீடுகளை தரைமட்டமாக்கியது என்றார். இது காசாவின் பிற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்குமிடமாக இருந்தது. இது ஒரு உண்மையான படுகொலை. இங்குள்ள அனைவரும் அமைதியான மக்கள். இங்கு எதிர்ப்பு போராளிகள் இருந்ததாக கூறும் எவருக்கும் நான் சவால் விடுகிறேன், என்று அவர் கூறினார்.

மற்றொரு வான்வழித் தாக்குதல் மத்திய காசாவில் புரேஜ் அகதிகள் முகாமில் உள்ள பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கியது. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக அல்-அக்ஸா மருத்துவமனை ஊழியர்கள் அசோசியேட் பிரெஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

வியாழன் அன்றும் முகாம் தாக்கப்பட்டது. முறையீடுகள் மற்றும் வெளிநாட்டு எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இஸ்ரேல் காசா முழுவதும் குண்டுவீச்சைத் தொடர்ந்தது, அது ஹமாஸை குறிவைப்பதாகக் கூறி, போராளிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.

காஸாவில் உள்ள இஸ்ரேலியப் படைகள்- வெடிபொருட்கள், தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஜோர்டானில் அரபு வெளியுறவு மந்திரிகளை சந்தித்த ஒரு நாள் கழித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

2007 இல் ஹமாஸ் பொறுப்பேற்றதில் இருந்து காஸாவில் எந்த அதிகாரமும் இல்லாத அப்பாஸ், 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றிய மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை உள்ளடக்கிய ஒரு சுதந்திர அரசை நிறுவும் ஒரு "விரிவான அரசியல் தீர்வின்" ஒரு பகுதியாக மட்டுமே பாலஸ்தீனிய அதிகாரம் காஸாவின் கட்டுப்பாட்டை ஏற்கும், என்றார்.

இஸ்ரேலுடனான கடைசி சமாதானப் பேச்சுக்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முறிந்தன, மேலும் இஸ்ரேலின் அரசாங்கம் பாலஸ்தீனிய அரசை எதிர்ப்பவர்களால் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதற்கிடையே அரபு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு காசாவில் குடியிருப்புப் பகுதிகள் வான்வழித் தாக்குதல்களில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை, மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை மீண்டும் வீசின.

காஸாவின் பிரதான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சாமான்கள், செல்லப்பிராணிகளை சுமந்து கொண்டும், சக்கர நாற்காலிகளைத் தள்ளிக்கொண்டும் கூட்டத்தினர் நடந்து சென்றனர். இஸ்ரேலிய துருப்புக்களைக் கடந்து செல்லும் போது ஒருவர் கைகளை உயர்த்தி 500 மீட்டர்கள் நடந்ததாக கூறினார். மற்றொருவர் சாலையோரம் உடல்களைப் பார்த்ததாக விவரித்தார்.

தெற்கு காசாவில் வசிப்பவர்கள் தப்பிச் செல்ல ஒரு வழி பாதை தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.

காசாவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள், அதாவது 70% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா கூறியது.

மருத்துவமனைகளில் மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் தீர்ந்து வருகிறது. ஏறக்குறைய ஒரு மாதமாக எரிபொருள் எதுவும் வரவில்லை என்று ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் கூறியது. இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிக் குழு எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால், போர் பரந்த பதட்டங்களைத் தூண்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அரசு நடத்தும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் தொடக்கத்திலிருந்து மேற்குக் கரையில் குறைந்தது 150 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவை ராஜினாமா செய்யுமாறும், ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளை திரும்பப் பெறுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால், 1,400 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்க நெதன்யாகு மறுத்துவிட்டார். பாலஸ்தீனத்தில் தொடரும் ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேலிய ராணுவம் நடவடிக்கையின் போது அதன் 29 வீரர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளது.

Read in English: Gaza has lost telecom contact again, while Israel’s military announces it has surrounded Gaza City

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment