ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவைக் கொல்லும் முயற்சியில் இஸ்ரேல் பெய்ரூட் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியும், ராக்கெட்களை ஏவியும் உள்ளது. ஹிஸ்புல்லா தலைவரை கொல்லும் முயற்சியில், பெய்ரூட்டின் தெற்கே உள்ள குடியிருப்புக் கட்டிடங்களை இஸ்ரேலியப் போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியது. வெள்ளிக்கிழமை- சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் தீவிரமடைந்தது.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய புலனாய்வு அமைப்புகளின் ஆரம்ப மதிப்பீடு, பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை மற்றும் அளவு மற்றும் தீவிரவாதக் குழுவிற்குள் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என நியூயார்க் டைம்ஸ் செய்திகளுக்கு கூறினர்.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சப்படுவதாக கூறினர்.
/indian-express-tamil/media/media_files/tzbza7cYMtbTIQMvwLr4.webp)
பெய்ரூட்டின் தெற்குப் பகுதியிலிருந்து வரும் காட்சிகள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு தெருவில் குறைந்தது நான்கு குடியிருப்பு கட்டிடங்களாவது அழிக்கப்பட்டதைக் காட்டுகிறது. மூன்று கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானது, மற்றொன்று இடிந்து விழுந்தது, மேல் தளங்கள் மட்டும் ஓரளவு அப்படியே இருந்தன.
ஹசன் நஸ்ரல்லாஹ்வின் முக்கியத்துவம்
ஹசன் நஸ்ரல்லாஹ் சுமார் மூன்று தசாப்தங்களாக ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். 64 வயதான அவரது தலைமையின் கீழ், ஹெஸ்பொல்லா இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டது மற்றும் அண்டை நாடான சிரியா உடனான மோதலிலும் பங்கேற்றார், ஜனாதிபதி பஷர் அசாத்திற்கு ஆதரவாக அதிகார சமநிலையை உயர்த்த உதவினார்.
நஸ்ரல்லா 1960ல் பெய்ரூட்டின் வறிய வடக்கு புறநகர் பகுதியான ஷர்ஷாபூக்கில் ஒரு ஏழை ஷியைட் குடும்பத்தில் பிறந்தார். அவர் theology படித்தார் மற்றும் ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவராக மாறுவதற்கு முன்பு ஷியா அரசியல் மற்றும் துணை ராணுவ அமைப்பான அமல் இயக்கத்தில் பணிபுரிந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: With airstrikes, missiles, Israel hits Beirut in attempt to kill Hezbollah chief Hassan Nasrallah
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, ஹெஸ்பொல்லா, அதன் எல்லையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகளைத் தாக்கத் தொடங்கியது. காசாவுக்கு ஆதரவாக தாக்குதல் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“