இஸ்ரேல் மற்றும் லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமை தொடங்கியது.
அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்ட நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 13 மாதம் நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் இருந்து ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதாக அறிவித்தார் மேலும் இந்த ஒப்பந்தம் "பகைமைகளை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது". போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 7.30 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் பிடென் மற்றும் பிரெஞ்சு அதிபர் ம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "போர்நிறுத்த ஒப்பந்தம் நீடித்த அமைதியை மீட்டெடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்கும் மற்றும் இரு நாடுகளிலும் வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப அனுமதிக்கும்." என்றார்.
போர் நிறுத்தத்தின் விதிமுறைகள் என்ன?
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 60 நாள் போர் நிறுத்தத்தை உறுதி செய்கிறது, இதன் போது ஹெஸ்பொல்லா போராளிக் குழு இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் லெபனான் பிரதேசத்தில் இருந்து முழுமையாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் இராணுவம் சுமார் 5,000 துருப்புக்களை தெற்கு பிராந்தியத்தில் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் துருப்புக்கள், லெபனான் இராணுவம் மற்றும் ஒரு பன்னாட்டுக் குழு ஆகியவை ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா குழுவைக் கண்காணித்து மேற்பார்வையிடும் என்றும் ஒப்பந்தம் கூறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: In first step to peace, Israel-Lebanon ceasefire agreement comes into effect: What does the pact say?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“