Italy has claimed that it developed world's first vaccine against coronavirus : கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இதனை எதிர்க்கும் வழி தெரியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் நாளுக்கு நாள் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது.
இஸ்ரேலில் அமைந்திருக்கும் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர். (Israel Institute for Biological Research) மோனோக்ளோனல் நியூட்ரிலைஸிங் ஆண்டிபாடியை (Monoclonal antibodies) உருவாக்கியுள்ளது என்றும் இந்த ஆண்டிபாடிகள் கொரோனா நோயாளியின் உடலுக்குள் சென்று வைரஸ்களை அழிக்க உதவுகிறது என்று அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் நாஃப்தலி பென்னட் (Defence Minister Naftali Bennett) என்றும் கூறியிருந்தார்.
அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இந்நிலையில் இத்தாலி, உலகிலேயே கொரோனா வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இதற்கான ஆராய்ச்சியை ரோமில் இருக்கும் லஜ்ஜாரோ ஸ்பல்லன்சானி தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியை முதலில் எலிகளில் சோதனை செய்த பிறகு, மனிதர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் மத்தியில் நோய் பரவலை இந்த தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்று டாக்கிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லுய்கி ஔரிசிக்சியோ (Luigi Aurisicchio) அறிவித்துள்ளார். உலகிலேயே அதீத தொழில்நுட்ப உக்திகளை கொண்டு இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது. கோடை கால முடிவில் இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டம் தீட்டியுள்ளது இத்தாலி அரசு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.