யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவையை இலங்கை அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்க உள்ளது என்று இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளர். மேலும், இலங்கையின் அந்நியச் செலாவணி அந்நாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத் துறை உள்ளது என்று கூறினார்.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண தீபகற்பத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை அடுத்த வாரத்திற்குள் மீண்டும் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விமான சேவையைத் தொடங்குவதன் மூலம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சுற்றுலாத் துறைக்கு உதவும் என்றும் பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார். சுற்றுலாத்துறை இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இருப்பினு, 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் பரவல் தொடங்கியதும் இலங்கை சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. இது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.
நவம்பர் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் 107.5 மில்லின் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த ஆண்டு முதல் பதினொரு மாதங்களில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மூலம் இலங்கைகு கிடைத்த வருமானம் 1129.4 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
“பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் மீண்டும் தொடங்கும், அநேகமாக டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் தொடங்கும்” என்று இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா திங்கள்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
“ஓடுபாதையில் இன்னும் சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன.” என்று இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
தற்போதைய ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே பயணிக்க முடியும். இந்த விமான நிலையம் 2019 அக்டோபரில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்துதான் அங்கு தரையிறங்கியது.
2019 ஆம் ஆண்டு விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளாலும் நிதியளிக்கப்பட்டது.
முன்னதாக, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான துணை நிறுவனமான இந்தியாவின் அலையன்ஸ், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.
இருப்பினும், 2019 நவம்பரில் இலங்கையில் அரசாங்கம் மாறிய பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
1948-ல் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தவறாகக் கையாள்வதன் காரணமாக ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
செப்டம்பரில், உலக வங்கி 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அறிவித்தது. இது இலங்கை சந்தித்து வரும் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.
அந்நிய கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்வெட்டு மற்றும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“