தமிழர்கள் வாழும் பகுதியில் கறுப்புக் கொடியுடன் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினம்

கண்டனம் தெரிவித்து யாழ் பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.

Jaffna University Students hoist black flags : இலங்கையின் 71வது சுதந்திர தினம் இன்று. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் சிறப்பாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டாலும், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தில் கறுப்பு நாளாக அறிவித்து கணடன போராட்டங்கள் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருக்கும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களின் நிலைப்பாட்டினையும் கறுப்பு நாளாக கடைபிடிக்கப்படுவதன் காரணத்தையும் கூறியுள்ளனர்.

 வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று தான் 71 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. ஆனால் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிற்று. தானாக முன்வந்து சரணடைந்தவர்கள், யுத்ததால் இடம் மாற்றி அமர்த்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள், புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கம் என்று கூறி தமிழ் இளைஞர்களை கைது செய்தல் போன்று தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது இந்த தமிழ்ச்சமூகம்.

இதற்கு யாழ் பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றி தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளது மாணவர்கள் ஒன்றியம்.  அதே சமயத்தில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் 71வது சுதந்திர தினம் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close