ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தின் இருக்கைளில் உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஜப்பானின் ஹனேடாவுக்கு குவாண்டாஸ் QF59 விமானம் சென்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அனைத்து இருக்கைளில் உள்ள திரைகளிலும் R-ரேட்டட் படமான டாடியோ ஒளிபரப்பாகி உள்ளது.
17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதை ஆஃப் செய்யவோ, நிறுத்தி வைக்கவோ முடியாமல் போனதால் பயணிகள் முகம் சுளித்தனர். தொடர்ந்து இதுகுறித்து புகார் தெரிவித்த பின் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின் இது சரிசெய்யப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“