Jill Biden : நவம்பர் 3ம் தேதி நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மகத்தான வெற்றியை பெற்றி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். எப்போதும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் தன் மனைவியுடன் இணைந்து நாட்டின் பொதுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் துவங்கி அனைத்திலும் “ஃப்ர்ஸ்ட் லேடி” என்ற லேபிளுடன் அவர்கள் வலம் வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த லேபிளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன். அலுவலக பணிகளை தாண்டியும் தன்னுடைய கனவுகளை நோக்கி தனக்கான அடையாளத்தை அவர் தக்க வைத்துள்ளார்.
69 வயதாகும் ஜில் பைடன், ஜோ பைடனை 1977ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கல்வித்துறையில் முனைவர் பட்டத்துடன் நான்கு பட்டங்களைப் பெற்றிருக்கும் ஜில் பைடன் பல்கலைக்கழக பேராசியர். வடக்கு விர்ஜினியா கம்யூனிட்டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இப்போது மட்டும் அல்லாமல் எப்போதுமே தனக்கான அடையாளத்தை அவர் விட்டுத் தந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் என்றால், பாரக் ஒபாமா அதிபராக இருந்த போது 8 வருடங்கள் துணை அதிபராக பணியாற்றி வந்தார் ஜோ பைடன். அப்போது செகண்ட் லேடி ஆஃப் யுனைட்டட் ஸ்டேட்ஸாக ஜில் இருந்த போதும் இந்த பேராசிரியர் பொறுப்பை துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவர் விர்ஜினியா கம்யூனிட்டி கல்லூரியின் நிரந்தர உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் தன்னுடைய கணவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதவுவதற்காக சிறிது இடைவெளி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil