Joe Biden gets COVID-19 booster : கூட்டாட்சி கட்டுப்பாட்டாளர்கள் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அமெரிக்கர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பரிந்துரைத்து சில நாட்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசியை திங்கள் கிழமை அன்று பெற்றுக் கொண்டார். ஏற்கனவே உள்ள மருத்துவ நிலைமைகள் மற்றும் அதிக ஆபத்துள்ள வேலை சூழல்களில் பணியாற்றும் மற்றவர்களுக்கு மூன்றாவது டோஸை பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் படிக்க : 11 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்; கோவை முதலிடம்
அதிகப்படியான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது தான் தற்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயலாகும் என்று பைடன் தன்னுடைய பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு முன்பு கூறினார். முதல் இரண்டு தடுப்பூசி டோஸ்களை செலுத்திய போதும் தனக்கு இதர பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டிசம்பர் 21ம் தேதி அன்று 78 வயதான ஜோ பைடன் தன்னுடைய முதல் டோஸை பெற்றார். மூன்று வாரங்களுக்கு பிறகு ஜனவரி 11ம் தேதி அன்று தன்னுடைய மனைவி ஜில் பைடனுடன் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார். தன்னுடைய மனைவி ஜில் பைடனும் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார் என்றும் தற்போது வடக்கு விர்ஜீனியா கம்யூனிட்டி கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
செண்டர்ஸ் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் ப்ரெவென்சன் அண்ட் தி ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் (Centers for Disease Control and Prevention and the Food and Drug Administration) ஃபைசர் தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகு வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பைடன் எனக்கு 65 வயதைத் தாண்டியது என்பதை ஒப்புக்கொள்வது கடினம், ஆனால் நான் என் பூஸ்டர் ஷாட் பெறுவேன் என்று கூறினார்.
Tamil news live updates : 1-8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது? முதல்வர் ஆலோசனை
இந்த கோடை காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி பெறும் சாம்பியனாக பைடன் உருவெடுத்தார். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா வைரஸால் தொற்று கணிசமாக உயர்ந்தது. பெரும்பான்மையான வழக்குகள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், கட்டுப்பாட்டாளர்கள் இஸ்ரேலில் இருந்து ஆதாரங்களை சுட்டிக்காட்டினர் மற்றும் அமெரிக்காவில் ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஃபைசர் ஷாட்டின் மூன்றாவது டோஸ் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு ஏழை நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ பாதுகாப்பை பெறுவதற்கு முன்பே அமெரிக்கா பூஸ்டர் தடுப்பூசிக்கு செலுத்தும் அழுத்தம் உலக சுகாதார நிறுவனம் மற்றும் இதர அமைப்புகளின் கோபத்திற்கு ஆளானது. உலக அளவில் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மூன்றாவது டோஸ் செலுத்தும் முயற்சியை கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் மற்றும் இதர அமைப்புகள் கேட்டுக் கொண்டன. கடந்த வாரம் வரும் ஆண்டில் மொத்தம் 1 பில்லியனுக்கு அமெரிக்கா 500 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசியை ஏழை நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்குவதாக கூறினார்.
துணை அதிபர் கமலா ஹாரீஸ் மாடெர்னா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த தடுப்பூசிக்கு இன்னும் பூஸ்டர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அடுத்த சில வாரங்களில் இது சாத்தியப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியையும் பூஸ்டர் தடுப்பூசியாக அறிவிக்க அந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தரவுகளை மருத்துவ கட்டுப்பாட்டாளரகம் கேட்டுள்ளது.
ஆக்ஸ்டின் 2வது வாரத்தில் இருந்து ஃபைசர் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக அமெரிக்காவில் உள்ள 2.66 மில்லியன் நபர்கள் பெற்றுள்ளனர். ஃபைசர் தடுப்பூசி மூலம் 100 மில்லியன் அமெரிக்கர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திய 6 மாதங்கள் கழித்து ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.