Advertisment

ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது - ஜோ பைடன்

ரஷ்ய படையெடுப்பை கண்டிப்பதில் மேற்கத்திய நாடுகளில், இந்தியாவின் எச்சரிக்கையான நிலைப்பாடு உலக மன்றங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Tamil News Update: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து, மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடுகளை பார்க்கையில், இந்தியா சற்று நடுங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் கூறுகையில், யான நடவடிக்கை எடுப்பதில் குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால், இவ்விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது என தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொழில் நிறுவனங்களின் சிஇஓ காலாண்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகளும், குவாட் அமைப்பினரும் ஓரணியாக உள்ளன.

உக்ரைன் எல்லையில் புதின் படைகளை குவித்தப்போது, நாம் ஒன்றாக செயல்பட வேண்டுமென நேட்டோவின் அவசரக் கூட்டத்திற்கு ஐரோப்பாவில் அழைப்பு விடுத்தேன். ஒரு விஷயத்தில் உறுகியாக உள்ளேன். எனக்கு புதினை குறித்து நன்கு தெரியும். ஒரு தலைவருக்கு தான் மற்றொரு தலைவர் பற்றி தெரியும். அவர், நேட்டோவை பிரித்துவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்தார்.

நேட்டோ ஒற்றுமையாக இருக்கும் என அவர் ஒருபோதும் நினைத்தவாய்ப்பில்லை. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ரஷ்ய அதிபரால் தான், நேட்டோ இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இருக்கிறது என்றார்.

உக்ரைன் விவகாரத்தில் குவாட் அமைப்பின் நிலைப்பாடு குறித்து ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால், இவ்விவகாரத்தில் நிலைப்பாடை எடுத்திட இந்தியா சற்று நடுங்குகிறது என்றார்.

போர் தொடங்கியது முதலே, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறும் இந்தியா வலியுறுத்தியிருந்தது. அதே சமயம், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்து விலகியிருந்தது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முயற்சிப்பதாக கடந்த மாதம், அமெரிக்க அதிபர் பைடன், தெரிவித்திருந்தார்.

நேட்டோ என்பது 30 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குழுவாகும். நேட்டோவின் கூற்றுப்படி, "அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகள் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அளிப்பதுதான் எங்கள் நோக்கமாகும் என தெரிவித்துள்ளது.

குவாட் அமைப்பில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளன. இவர்கள் ஒரு கூட்டணி என கூற முடியாது.ஆனால், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் மதிப்புகளால் இயக்கப்படும் குழுவாகும். இவர்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்துவதில் முக்கியத்தவம் அளிப்பார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Russia Joe Biden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment