சர்வதேச நீதிமன்றம் (ICJ) நீதிபதி தேர்தலுக்கு தல்வீர் பந்தாரி இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டார். தேர்தலில் இருந்து பிரிட்டன் தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டதை அடுத்து நடதப்பட்ட மறு தேர்தலில் தல்வீர் பந்தாரி ஐந்தாவது மற்றும் உலக நீதிமன்றத்தின் கடைசி இருக்கையை வெற்றி பெற்றுள்ளார்.
பந்தாரி நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக கூறி அவரை பாராட்டியுள்ளார், வெளித்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “சர்வதேச நீதிமன்றதிற்கு தேர்வான நீதிபதி தல்வீர் பந்தாரிக்கு எனது பாராட்டுக்கள். அவர் மறு தேர்வு செய்யப்பட்டது நமக்கு பெருமைக்குரிய தருணம்” என ட்வீட் செய்திருந்தார்.
ஐக்கிய தேசிய பொதுச் சபையில் 183-193 வாக்குகளும் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மொத்த 15 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார் இவர்.
இதனையொட்டி, வெளித்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “வந்தே மாதரம் – சர்வதேச உச்சநீதிமன்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளளார். ஜெய் ஹிந்த்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
71 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து சார்பாக சர்வதேச நீதிமன்றத்தில் எந்த நீதிபதியும் இருக்கப்போவதில்லை. 15 நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வில் ஐந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்க ஒன்பது வருட காலத்திற்கு ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் தேர்தல் நடைபெறும்.