Advertisment

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், தான் வகித்து வந்த கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

author-image
WebDesk
New Update
Justin

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Canada PM Justin Trudeau announces resignation: ‘Country deserves a real choice in election’

 

Advertisment
Advertisement

மேலும், தனது கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான வலுவான தேர்வு முறையின் அடிப்படையில் கட்சியின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் பதவி விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டவா பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ட்ரூடோ தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கு அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மட்டுமே தான் கனடாவின் பிரதமர் பதவியில் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

"உட்கட்சி விவகாரங்களில் நாம் போராட வேண்டி இருந்தால், அடுத்த தேர்தலுக்கு சரியான தேர்வாக இருக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது" என்று அவர் கூறியதாக தி கார்டியன் இதழ் தெரிவித்துளது.

Justin Trudeau Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment