காபூல் குண்டு வெடிப்பு: தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடுவோம் – பைடன் உறுதி

காபூலில் இருக்கும் ராணுவ தளபதிகளிடம் திட்டங்கள் தயார் செய்து ஐ.எஸ் அமைப்பு, தலைவர்கள், இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் ஜோ பைடன்.

Kabul airport attack : காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு மத்தியிலும் அமெரிக்கர்கள் மற்றும் இதர முக்கிய நபர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்று வியாழக்கிழமை திட்டவட்டமாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டடைந்தது அவர்களின் செயலுக்கு தக்க பதிலடி தருவோம் என்றும் அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய பைடன், இஸ்லாமிய அரசு குழுவின் ஆப்கானிஸ்தான் கூட்டமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் அவர்கள் தான் 12 அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் ஆப்கான் பொதுமக்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்றும் கூறினார். தற்போது நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் தாலிபானுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

20 ஆண்டுகள் முன்னேற்றம் ஒன்றுமில்லாமல் போனது – ஆப்கானின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் வேதனை

அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும் என்று நம்புவதற்கு எங்களுக்கு சில காரணங்கள் உள்ளன என்று தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி கூறினார். ஆனால் திட்டவட்டமாக இல்லை. காபூலில் இருக்கும் ராணுவ தளபதிகளிடம் திட்டங்கள் தயார் செய்து ஐ.எஸ் அமைப்பு, தலைவர்கள், இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் ஜோ பைடன்.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பானது பொதுமக்கள் மீது சமீபத்திய ஆண்டுகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபான்களை விட இது மிகவும் தீவிரமானது. இவர்கள் மீது 2017ம் ஆண்டு அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஐ.எஸ். குகைகள் மற்றும் சுரங்கங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்குகளை தாக்குதல் மூலம் அமெரிக்கா தகர்த்து எறிந்தது. தற்போது இந்த அமைப்பு நகர்புற ஆப்கானிய பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதால், இவர்களை கண்டு பிடித்து, பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்துவது அமெரிக்காவிற்கு கடினமான ஒன்றாக மாறியுள்ளது.

இவர்கள் மீது சரியான நேரத்தில், சரியான இடத்தில் தாக்குதல் நடத்துவோம். இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெற்றி பெறாது. நாங்கள் அமெரிக்கர்களையும், ஆப்கானில் உள்ளா எங்களின் இதர கூட்டாளிகளையும் வெளியேற்றுவோம். எங்களின் பணி தொடரும். அமெரிக்கா எதற்கும் பயப்படாது என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

முதலில் அமெரிக்கர்களை பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்புவது முக்கியமானது என்று ஜோபைடனிடம் ராணுவ தளபதிகள் கூறியுள்ளனர். மேலும், நாங்கள் தீவிரவாதிகளால் தடுத்து நிறுத்தப்படமாட்டோம். எங்களின் பணியை அவர்கள் தடுத்து நிறுத்திவிட இயலாது என்றும் அவர் கூறினார்.

உண்மையில், அவரது புளோரிடா தலைமையகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வையிடும் மத்திய கட்டளைத் தலைவர் ஜெனரல் ஃப்ராங்க் மெக்கன்சி, பென்டகன் செய்தி மாநாட்டில் பைடன் பேசுவதற்கு முன்பு, முதலில் நான் இதனை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானியர்களின் உயிரிழப்பால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். மக்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். 5000க்கும் மேற்பட்டோர் விமான நிலையங்களில், விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

இந்தியாவை நம்பி டெல்லி வந்த ஆப்கான் எம்.பி., துருக்கிக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

1000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் பல ஆப்கானியர்கள் காபூலில் இருந்து வெளியேற சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பேசிக் கொண்டிருக்கும் போது அமெரிக்க படைகளை பாராட்டிய அவர், இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதே மாதம் ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. மே 2021க்குள் அமெரிக்க ராணுவம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதற்கு பதிலாக தாலிபான் அமெரிக்கர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

பைடனிடம் தாக்குதல் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல், 12வது நாள் வெளியேற்றத்திற்கும், மொத்தமாக வெளியேற்றுவதற்கு உறுதி பூண்ட தினத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. சில குடியரசுக் கட்சியினரும் மற்றவர்களும் அடுத்த செவ்வாய்க்கிழமை காலக்கெடு என்பதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் மற்றும் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகுதான், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவது மிகவும் குழப்பமாகவும், கொடியதாகவும் மாறியுள்ளது என்று அமெரிக்க நிர்வாகத்தின் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

முன்பாகவே அமெரிக்கர்களை வெளியேற்றி இருக்க வேண்டும் என்று பலராலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதல்கள் அனைத்து பக்கத்தில் இருந்தும் ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை தரும் நிகழ்வாக மாறியுள்ளது. அமெரிக்கா போர் நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் அனைத்து துருப்புகளும் வெளியேற்றப்படும் என்று பைடன் ஏப்ரல் மாதம் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சி அவைத் தலைவர் கெவின் மெக்கர்த்தி, அனைத்து அமெரிக்கர்களும் வெளியேறும் வரை அமெரிக்கா திரும்பப் பெறுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கருத்தில் கொள்ள சபையை மீண்டும் அமர்வுக்கு கொண்டு வருமாறு சபாநாயகர் நான்சி பெலோசிக்கு அழைப்பு விடுத்தார். இது தேவையற்ற நடவடிக்கை என்று நான்சியின் அலுவலகம் பரிந்துரைகளை நிராகரித்தது.

இந்த தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். அமைப்பினால் நடத்தப்பட்டது என்று ஜெனரல் மெக்கென்ஸி அறிவித்தார். இது போன்று மேலும் பல தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத்தின் ஆபே நுழைவாயில் அருகே முதல் வெடிகுண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். பிறகு பாரோன் ஹோட்டல் அருகே மீண்டும் ஒரு வெடிகுண்டு வெடித்தது.

இது நடைபெறும் என்று எதிர்பார்த்தது தான். இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தாலிபான் தளபதிகளுடன் அமெரிக்க தளபதிகள் பணியாற்றி வருவதாகவும் மெக்கென்சி கூறினார். 12 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல்களின் விவரங்கள் வெளிவந்தவுடன், வெள்ளை மாளிகை வியாழக்கிழமை இஸ்ரேலின் புதிய பிரதமருடனான பைடனின் முதல் சந்திப்பு மாற்றி அமைக்கப்பட்டது. அதே போன்று, அமெரிக்காவிற்கு வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளக்குடியமர்த்துவது குறித்து ஆளுநர்களுடனான வீடியோ மாநாடும் ரத்து செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமைக்குள் 5,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றுவதற்கு முன்னர் அமெரிக்காவிற்கு அதன் வெளியேற்ற நடவடிக்கைகளை முடிக்க தேவையான நேரத்தை கொடுக்க காபூலில் தங்கள் வெளியேற்ற முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக பல அமெரிக்க கூட்டாளிகள் கூறினர்.

காலக்கெடுவை நீட்டிக்க கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க சேவை உறுப்பினர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சுறுத்தலை பைடன் தனது திட்டத்தை கடைபிடிக்க ஒரு காரணமாக கூறினார்.

ஏபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ராஸ் வில்சன், “ஆப்கானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்களுக்கு விமான நிலையத்திற்கு செல்ல பாதுகாப்பான வழிகள் உள்ளன. காலக்கெடுவுக்குள் வெளியேறாவிடில் ஆபத்துகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் அறிவித்தார்.

விமான நிலையம் அருகே வாகனத்தால் பரவும் வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், விமானப் போக்குவரத்து வியாழக்கிழமை தொடர்ந்தது. வாஷிங்டன் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 13,400 பேர் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ விமானங்களில் 5,100 பேரும் கூட்டணி மற்றும் கூட்டாளர் விமானங்களில் 8,300 பேரும் வெளியேற்றப்பட்டனர். அதற்கு முதல்நாள் வெளியேற்றப்பட்ட 19 ஆயிரம் நபர்களுடன் ஒப்பிடும் போது இது கணிசமான அளவில் குறைந்த அளவாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kabul airport attack joe biden vows to finish kabul evacuation avenge us deaths

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com