Advertisment

காபூல்: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தற்கொலைப் படையினர் பலி

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களைக் கொன்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kabul airport blasts, us drone airstrikes, Taliban, காபூல் விமான நிலையம், அமெரிக்க ட்ரோன் தாக்குதல், தலிபான்கள், குண்டுவெடிப்பு, us drone strikes suicide bombers vehicle near kabul airport, afghanistan, us, pakistan

அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்திற்கு இடையே காபூல் சர்வதேச விமான நிலையத்தை தாக்க வந்த பல 'தற்கொலை படையினர் சென்ற வாகனத்தை ட்ரோன் மூலம் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Advertisment

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 200 பேர் பலியான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. ஆப்கானிஸ்தான் போலீஸ் தலைவர் கருத்துப்படி, காபூல் விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ராக்கெட் தாக்கியதில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது. ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு தாக்குதல்களும் (ட்ரோன் மற்றும் ராக்கெட்) ஆரம்பத்தில் தனித்தனி சம்பவங்களாகத் தோன்றின. இருப்பினும் இரண்டு தாகுதல் பற்றிய தகவல்களும் மிகவும் குறைவாகவே இருந்தன.

முன்னதாக, குறிப்பிடத்தக்க நம்பகமான பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. விமான நிலையம் மற்றும் விமான நிலைய வாயில்களுக்கு வருவதை தவிர்க்குமாறு அமெரிக்கா அந்நாட்டு குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. இந்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகமும் பிரதிபலித்தன. குறைந்தது 169 ஆப்கானிஸ்தான் மற்றும் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்களைக் கொன்ற வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பும் இதே போன்ற ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகளை அமெரிக்கா கொன்றது.

ஆப்கானிஸ்தானின் மூத்த தலைவர்கள், இரண்டு பிராந்திய வல்லுநர்கள் உட்பட, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாட்டின் அடுத்த அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு புதிய முன்னணியை உருவாக்க சில வாரங்களுக்குள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்று ஒரு குழுவின் உறுப்பினர் கூறினார். ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய படைகள் இறுதிக் கட்டப் படையை நோக்கிச் செல்லும் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக விமான நிலையத்தில் அமெரிக்க படைகளின் மீதமுள்ள குழுக்களை வெளியேற்றுவது தொடங்கியது. மற்ற நேட்டோ படைகளும் தங்கள் படைகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் சனிக்கிழமை விவாதித்தார்.

தலிபான் ஆட்சியை விட்டு வெளியேறத் துடிக்கும் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான குண்டுவெடிப்புகளில் ஒன்றிற்குப் பிறகும் காபூலின் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர். முந்தைய நாள் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்று காபூல் நகரின் மருத்துவமனைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் பரபரப்பாக இருந்தன.

காபூல்விமான நிலையத்தில் கூட்டத்தின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த முந்தைய நாட்களைவிட நூற்றுக்கணக்கான எண்ணிக்கையாக குறைந்தது. வியாழக்கிழமை பிற்பகல் நடந்த குண்டுவெடிப்பில், குறைந்தது 170 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் விமான நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200 பேர் பலியான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஊடக வெளிட்ட தகவலின்படி, பல சமூக ஊடக பயனர்கள் குறிப்பிட்டுள்ளபடி, காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு நடந்ததாக படங்களை வெளியிட்டனர்.

ஆப்கானிஸ்தான் போலீஸ் தலைவர் கருத்துப்படு, காபூல் விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ராக்கெட் தாக்கியதில் ஒரு குழந்தை பலியானது என்று தெரியவந்தது.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களைக் கொன்றது. பாகிஸ்தானின் பஜவுர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக பதிவாகியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Afghanistan Taliban Take Kabul Kabul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment