அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் வந்தால் அது இந்நாட்டுக்கு அவமானம் – ட்ரெம்ப்

மக்கள் கமலாவை வெறுக்கிறார்கள் என்று செவ்வாய் கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசினார்.

By: September 10, 2020, 2:18:23 PM

Kamala Harris becoming president would be insult to America : Donald Trump : வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவில் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய ஜோபைடன் போட்டியிடுகிறார். அதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு ஜோ பைடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவின் செனேட்டராக இருக்கும் கமலா ஹாரிஸை தேர்வு செய்தால் அமெரிக்காவிற்கே அது மிகப்பெரிய அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் அறிவித்துள்ளார். செவ்வாய் கிழமை நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய கமலாவை ஜோ பைடன் தேர்வு செய்தது ஆச்சரியம் அளிக்கிறது. எப்போதுமே தேர்தலை நோக்கி செல்கிறவர்களை தான் தேர்வு செய்ய வேண்டும்.

துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்ணும், ஆசிய – அமெரிக்க பெண்ணும் இவர் தான். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவர் வந்தால் இது நாட்டுக்கு மிகவும் அவமான ஒன்றாகும். மக்கள் கமலாவை வெறுக்கிறார்கள் என்று கூறினார். மேலும் ஜோ பைடன் வென்றுவிட்டால் சீனா வென்றுவிட்டதாக அர்த்தம் என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kamala harris becoming president would be insult to america people dont like her donald trump

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X