/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-9-3.jpg)
அமெரிக்காவில், சில நாட்களுக்கு முன்பு துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸின் தலையில் ஈ ஒன்று சுற்றித்திரிந்தது.
இந்த ஈ தற்போது அமெரிக்கா அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். உதாரணாமாக, மைக் பென்ஸின் தலையில் ஈ உட்கார்ந்திருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட MikePenceFly___ என்ற ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் லட்சக் கணக்கான பாலோயர்ஸ்கள் ஈர்த்தது.
இந்த ஈ சமாச்சாரம், மிகப் பெரிய அரசியல் விவாதமாகவும் உருமாறியது. ( இதில், என்ன விவாதம் வேண்டிக்கிடக்கு என நினைக்கிறீர்களா?... இது, அமெரிக்கா அரசியல்)
wait for it pic.twitter.com/smqWv1zjlr
— Mike Pence's Fly ????️???? (@MikePenceFly___) October 10, 2020
— Mike Pence's Fly ????️???? (@MikePenceFly___) October 8, 2020
விவாதைத்தின் போது, பென்ஸின் தலையில் ஈ சுற்றித்திரிந்த வேளையில், கமலா ஹாரிஸ் மைக் நோக்கி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும், அந்த ஈ- ஐ அவர் நேரடியாக பார்த்தாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமலா ஹாரிஸ், விவாதத்தின் போது மைக் பென்ஸின் தலையில் சுற்றித்திரிந்த ஈ- ஐ பார்த்தாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Rachel Maddow: We could see
at home. Could you see it next to him? Sen. Kamala Harris: ... pic.twitter.com/Iu0LwOGPfL
— Maddow Blog (@MaddowBlog) October 15, 2020
எப்படியோ, இந்த ஈ சமாச்சாராம் இத்தோடு நின்றால் சரி!
மோடியின் நட்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரெம்பிற்கு உதவுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.