Advertisment

மைக் பென்ஸின் தலையில் அமர்ந்த ஈ-ஐ பார்த்தேன்: கமலா ஹாரிஸ் ஒப்புதல்

அமெரிக்காவில், சில நாட்களுக்கு முன்பு துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் நடைபெற்றது.

author-image
WebDesk
Oct 15, 2020 21:30 IST
மைக் பென்ஸின் தலையில்  அமர்ந்த ஈ-ஐ பார்த்தேன்: கமலா ஹாரிஸ் ஒப்புதல்

அமெரிக்காவில், சில நாட்களுக்கு முன்பு துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்  போது தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸின் தலையில் ஈ ஒன்று சுற்றித்திரிந்தது.

Advertisment

இந்த ஈ தற்போது அமெரிக்கா அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். உதாரணாமாக, மைக் பென்ஸின் தலையில்  ஈ  உட்கார்ந்திருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட MikePenceFly___ என்ற ட்விட்டர் கணக்கு  சில மணி நேரங்களில் லட்சக் கணக்கான பாலோயர்ஸ்கள் ஈர்த்தது.

இந்த ஈ சமாச்சாரம், மிகப் பெரிய  அரசியல் விவாதமாகவும் உருமாறியது. ( இதில், என்ன விவாதம் வேண்டிக்கிடக்கு என நினைக்கிறீர்களா?... இது, அமெரிக்கா அரசியல்)

 

 

 

 

 

விவாதைத்தின் போது, பென்ஸின் தலையில் ஈ சுற்றித்திரிந்த வேளையில், கமலா ஹாரிஸ் மைக் நோக்கி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும், அந்த ஈ- ஐ அவர் நேரடியாக பார்த்தாரா?  என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமலா ஹாரிஸ், விவாதத்தின் போது மைக் பென்ஸின் தலையில் சுற்றித்திரிந்த ஈ- ஐ பார்த்தாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 

எப்படியோ, இந்த ஈ சமாச்சாராம் இத்தோடு நின்றால் சரி!

 

மோடியின் நட்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரெம்பிற்கு உதவுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன?

#Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment