2020 அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகிய கமலா ஹாரிஸ்

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினார். குறிபிடத் தக்க வாக்குறுதிகளுடன் தனது பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு சில மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவு ஏற்பட்ட பிறகு அவர் போட்டியிலிருந்து விலகினார்.

By: Updated: December 4, 2019, 09:21:33 PM

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினார். குறிபிடத் தக்க வாக்குறுதிகளுடன் தனது பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு சில மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவு ஏற்பட்ட பிறகு அவர் போட்டியிலிருந்து விலகினார்.

பணியாளர்களிடையே ஏற்பட்ட எழுச்சி மற்றும் ஹாரிஸின் சொந்த கூட்டாளிகளிடையே ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு போட்டியிலிருந்து விலகும் முடிவு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சலில் தனது ஆதரவாளர்களிடம் அவர் போட்டி பிரச்சாரத்திற்கு முழுமையாக நிதியளிக்க தேவையான பணம் இல்லை என்று கூறினார்.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

இந்த அறிவிப்பு வியப்பாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது. ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை உச்சத்தில் தொடர்ங்கிய ஹாரீஸின் போக்கில் தீடீரென இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அவர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் தினத்தில் தனது பிரச்சாரத்தை பராக் ஒபாமா, ஷெர்லி சிஷோல்ம் போன்ற வரலாற்றுப்புகழ்மிக்க கறுப்பின அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கினார். அன்றைக்கு கலிபோர்னியாவின் ஆக்லாண்டில் அவரது உரையின்போது 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர் முதல் ‘Woman of Color’ ஆக (வெள்ளையர் அல்லாத கருப்பு, பழுப்பு, பிரவுன், மாநிறப் பெண்களை நிற ரீதியாக அல்லாமல் ஜனநாயக ரீதியாக குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது) முடியும் என்ற எண்ணத்திற்கு நம்பிக்கையை அளித்தார்.

சமீப மாதங்களாக ஹாரிஸின் ஆன்லைன் நிதி திரட்டல் மந்தமடைந்தது. அவரது பெரிய நன்கொடையாளர்கள் தனது பிரச்சாரத்திலிருந்து விலகிச் சென்றதால் பண ரீதியாக சிரமப்பட்டார். இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், அவர் திரட்டிய ஒவ்வொரு டாலருக்கும் 1.41 டாலருக்கும் அதிகமாக செலவழித்து, அவருடைய மில்லியன் கணக்கான கருவூலத்தை காலியாக்கினார்.

ஆன்லைனிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டார்; நியூ ஹாம்ப்ஷயரில் ஊழியர்களைக் குறைத்துவிட்டு அயோவாவுக்குத் திரும்பினார். அங்கே அவர் தனது குடும்பத்துடன் நன்றி அறிவிப்பு விடுமுறையைக் கழித்தார்.

செவ்வாய்க்கிழமை ஒரு சிறப்பு ஆதரவாக பி.ஏ.சி விளம்பரங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியபோதும், அவர் போட்டியிடுவதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை என்று தீர்மாணித்து இது போதுமானது இல்லை என்று போட்டியிலிருந்து விலகுவதாக மக்களிடம் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kamala harris of california drops out of the 2020 us presidential race

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X