திருவாரூர் மாவட்டம் பைங்காகாடு பகுதியை பூர்வீகமாக கொண்டு அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Advertisment
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், குடியரசு கட்சி வேட்பாளராக ஜோ பீடனும் களத்தில் உள்ளது. துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸை, குடியரசு கட்சி வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.
கமலா ஹாரிஸின் அம்மா, திருவாரூர் மாவட்டம் பைங்காகாடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் இதுவே பெரும்விவாதப்பொருளாக உள்ளது. இந்நிலையில், அந்த ஊர் மக்கள், இப்போதே கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக அறிவித்து அப்பகுதியில் கட்அவுட்களை வைத்துள்ளனர்.
Advertisment
Advertisements
கமலா ஹாரிஸின் உறவினரான மீனா ஹாரிஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். பைங்காகாடு பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கட்அவுட்கள் உள்ளிட்ட போஸ்டர்களை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
I was sent this from Tamil Nadu where our Indian family is from. It says “PV Gopalan’s granddaughter is victorious.” I knew my great grandfather from our family trips to Chennai when I was young—he was a big figure for my grandma and I know they’re together somewhere smiling now. pic.twitter.com/WuZiKimmqj
நான் சிறுவயதாக இருக்கும்போது சென்னை சென்றபோது என் தாத்தா, பாட்டியை பார்த்துள்ளேன். அவர்களின் கள்ளங்கபடமில்லாத சிரிப்பு மற்றும் பாசம் இப்போதும் கண்முன்னே நிற்பதாக மீனா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய், இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தந்தை, ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிஸ், இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
கமலாவின் தாய் சியாமளா கோபாலன், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் முன்னணி புற்றுநோயியல் ஆராய்ச்சியாளராக திகழ்ந்து வந்தார்.
சியாமளா, பி.வி, கோபாலனின் மகள் ஆவார். அவர் மத்திய அரசின் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு சென்றிருக்கும்போது, தாத்தா கோபாலனுடன் நீண்ட தொலைவு நடைப்பயணம் செல்வோம். அந்த நிகழ்வு என்றைக்கும் மறக்க இயலாதது. இன்று நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணம், எனது தாத்தாவின் வழிகாட்டுதல் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil