பாலின சமத்துவத்திற்கான ஐ.நா நிகழ்வு; முதன்முறையாக பங்கேற்கும் கமலா ஹாரிஸ்

உலகளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அதிகமான பெண்கள் சேர்க்கப்படுவதற்கும் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்

Kamala Harris to make UN debut as US vice president at gender equality meeting : அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர நிகழ்வில் பங்கேற்க உள்ளார் கமலா ஹாரிஸ். பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் மேம்பாடு தொடர்பாக அவர் உரையாட உள்ளார்.

பெண்களின் நிலை குறித்து நடத்தப்படும் 65வது ஆணையத்தில் அவர் பங்கேற்று பேச உள்ளார். மார்ச் 16ம் தேதி அந்த நிகழ்வு நடைபெற உள்ளது என்பதை ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்ட் திங்கள் கிழமை உறுதி செய்தார். பெண்கள் சிறப்பாக பணியாற்றினால் அந்த நாடும் சிறப்பாக பங்காற்றுகிறது என்பதை நாங்கள் நம்புகின்றோம் மற்றும் புரிந்து கொள்கிறோம் என்று தாமஸ் க்ரீன்ஃபீல்ட் கூறினார்.

எங்கள் உன்னதமான கடமைகளை உறுதியான நடவடிக்கையாக மாற்ற வேண்டிய நேரம் இது. “உலகெங்கிலும் உள்ள பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், உலகளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அதிகமான பெண்கள் சேர்க்கப்படுவதற்கும் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க அரசு பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க மற்றும் சுகாதார உரிமைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுத்தது. ஐ.நா தீர்மானங்களில் இது போன்ற வார்த்தை பயன்பாட்டினை அது எதிர்த்தது. மே மாதம் ட்ரெம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்துவதாக மே மாதத்தில் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title: Kamala harris to make un debut as us vice president at gender equality meeting

Next Story
இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்; உயிர் வாழவே விரும்பவில்லை – அதிர்ச்சி அளித்த மேகன்Lilibet Diana, Meghan, Harry, America, Meghan and Harry welcomed a daughter
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express