நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று இந்தியரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

என் கணவரின் படுகொலையில் இன்று தண்டனை வழங்கப்படுவதால், எனது கணவர் மீண்டும் உயிர் உடன் வரமாட்டார்.

By: Updated: May 5, 2018, 01:16:50 PM

இந்தியாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றருக்கு அமெரிக்கருக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியர்  ஸ்ரீனிவாஸ் அமெரிக்காவில் இருக்கும் பிரபல  நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம், அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதிக்கு ஸ்ரீனிவாஸ்  தனஹு நண்பர்களுடன் சென்றிருந்தார்.  அங்குள்ள தொலைக்காட்சியில்  கான்சால் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப்பந்தாட்ட போட்டியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது,  அங்கிருந்த இனவெறி பிடித்த அமெரிக்கர் ஒருவர்,  கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து  அங்கிருந்த இந்தியர்களை பார்த்து சரமாரியாக  சுட்டர். இதில், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தார்.  “எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அந்த நபர் கத்திக் கொண்டே சுட்டது அனைவருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இனவெறியில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இதில், துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட  ஆடம் புரிண்டன் என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 1 வருடமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி,  ஆடம் புரிண்டனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி  அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. இதுக் குறித்துள்ள பேசியுள்ள  ஸ்ரீனிவாஸின் மனைவி, “ நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி. என் கணவரின் படுகொலையில் இன்று தண்டனை வழங்கப்படுவதால், எனது கணவர் மீண்டும் உயிர் உடன் வரமாட்டார். ஆனால் இந்த தீர்ப்பு மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kansas man gets life in prison for killing indian immigrant srinivas kuchibhotla

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X