இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இப்போது பார்ப்போம்.
அமெரிக்க சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு
குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கார்த்தி சனிக்கிழமை தொடக்கத்தில் நள்ளிரவுக்குப் பிந்தைய 15 வது வாக்கெடுப்பில் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், புதிய GOP பெரும்பான்மை ஆளும் திறனைச் சோதித்த குழப்பமான வாரத்திற்குப் பிறகு அவர் சபாநாயகராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நாட்கள் கடுமையான வாக்குப் பதிவுகளுக்குப் பிறகு, ஒரு டசனுக்கும் அதிகமான பழமைவாத கட்சியினர் கெவின் மெக்கார்த்தியின் ஆதரவாளர்களாக மாறியாதால் அவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு முன் சபாநாயகராக ஜனநாயக கட்சியின் நான்சி பெலோசி இருந்தார்.
சீக்கிய குழந்தைகளுக்கான ஹெல்மெட்டை வடிவமைத்த கனடா சீக்கிய பெண்
கனடாவில் வசித்து வரும் டினா சிங், தன்னைப் போன்ற சீக்கிய குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதல் பாதுகாப்பு-சான்றளிக்கப்பட்ட மல்டிஸ்போர்ட் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார் என்று கனடாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் சி.பி.சி நியூஸ் தெரிவித்துள்ளது. தனது மகன்களின் தலைப்பாகைக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் எதுவும் சந்தையில் கிடைக்காததால் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/sikh-helmets-inc.jpg)
டினா சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாடல் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறார், இப்போது அது தயாரிப்பில் உள்ளது மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சைக்கிள்கள், இன்லைன் ஸ்கேட்கள், கிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்கேட்போர்டிங் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. டிசம்பர் 2022 இல், அவரது கண்டுபிடிப்பு சர்வதேச சோதனை நிறுவனமான SGS இலிருந்து தேர்ச்சி தரத்தைப் பெற்றது.
விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டவரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர்
லண்டனில் இருந்து பெங்களூர் வந்த நீண்ட தூர விமானத்தில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற பிரிட்டிஷ் இந்திய கல்லீரல் நிபுணர் ஒருவர் ஐந்து மணி நேரம் போராடியதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/indian-origin-doctor.jpg)
பர்மிங்காமின் குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரியும் 48 வயதான டாக்டர் விஸ்வராஜ் வெமலா, தனது தாயுடன் இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்தபோது, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சக பயணியைக் காப்பாற்றியுள்ளார் என்று பி.பி.சி தெரிவித்துள்ளது.
சக பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வேகக் கண்காணிப்பு சாதனம் மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு இயந்திரம் மற்றும் பயணிகளிடமிருந்து பிற பொருட்கள் உட்பட, விமானத்தில் உள்ள மருத்துவப் பொருட்களைக் கொண்டு, டாக்டர் விஸ்வராஜ் வெமலா 43 வயதானவரை இரண்டு முறை உயிர்ப்பிழைக்கச் செய்துள்ளார்.
வெளியுறவுத்துறை துணை செயலாளராக இந்திய அமெரிக்கர் நியமனம்
வெளியுறவுத்துறையின் உயர்மட்ட இராஜதந்திர பதவியான வெளியுறவுத்துறை துணை செயலாளராக வழக்கறிஞர் இராஜதந்திரி ரிச்சர்ட் வர்மா நியமிக்கப்பட்டதை இந்திய-அமெரிக்க அமைப்பு வரவேற்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/richard-verma-759.jpg)
டிசம்பரில், வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில், ஜோ பிடன் 54 வயதான ரிச்சர்ட் வர்மாவை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக நியமிக்க தனது நோக்கத்தை அறிவித்தார்.
அமெரிக்க செனட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த ரிச்சர்ட் வர்மா, வெளியுறவுத் துறையின் மிக உயர்ந்த இந்திய-அமெரிக்கராக இருப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil