திமிங்கலத்தின் பாசப்போராட்டம் :
தாய் அன்புக்கு ஈடு இணை வேறு ஏதேனும் இருக்குமாம் என்றால் அது சந்தேகம் தான். மனிதர்கள், விலங்குகள், உயிரினங்கள் என எதை எடுத்தாலும் அதிலும் தனித்து நிற்பவள் தான் தாய் . தாயிற்கும் பிள்ளைகளுக்குமான பாசப்போராட்டம் பார்ப்பவர்களை எளிதில் கண் கலங்க வைத்திடும்.
அமெரிக்காவில் கடல் வாழ் உயிரினமான திமிலங்கத்திற்கும், அதன் குட்டிக்கும் 17 நாட்கள் நடந்த பாசப்போராட்டம ஒட்டு மொத்த ஆராய்சியாளர்களையும் நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் நகரின் கடல்வாழ் உயிரின ஆய்வகத்தில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. இந்த திமிங்கலத்திற்கு நீண்ட காலம் கழித்து பிறந்த முதல் குட்டி என்பதால், தாய் திமிங்கலம் மிகுந்த மகிழ்ச்சியுடன் குட்டியை பராமரித்து வந்தது.
இந்நிலையில் தான் திடீரென்று ஒருநாள் குட்டி திமிங்கலம் உயிரிழந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத தாய் திமிங்கலம சோகத்தில் அழ தொடங்கியுள்ளது. இறந்த குட்டியை நிரீல் விடவும் மனமில்லாமல் 17 நாட்கள் தோள் மீதே வைத்து சுமந்து சென்றுள்ளது.

600 கிலோ மீட்டர் தூரம் குட்டியை சுமந்தபடி சுற்றி சுற்றி வந்துள்ளது. அதன் பின்பு தாய் திமிங்கலம் நீண்ட நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாததைக் கண்ட ஆராய்சியாளர்கள் தாய் திமிங்கலத்தை கண்டு பிடித்து அதன் முதுகில் இருந்த குட்டி திமிங்கலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.
தாய் திமிங்கலத்தின் பாசப்போராட்டத்தைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்கலங்கி நின்றுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.