வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் – தென்கொரியா

Kim Jong Un : ரயில் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், , கிம் ஜோங் உன் அப்பகுதியில் தான் இருக்கிறாரா என்பதை தங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

By: Published: April 27, 2020, 11:29:47 AM

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல் வெளியாகிவரும் நிலையில், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அங்கு வழக்கத்திற்கு மாறாக எவ்வித நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி அந்நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளும் அதிபர் கிம் ஜோங் உன், இந்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்வதேச நாடுகளிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

இதனிடையே, தென் கொரிய தலைநகர் சியோலில், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு அமைச்சர் கிம் இயோன் சுல் கூறியதாவது, வடகொரியா உடனான தங்களது நல்லுறவு தொடர்கிறது. தங்களது உளவுத்துறை அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவில் எவ்வித அசாத்திய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று கூறினார்.

கிம் ஜோங் உன், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் பீதி சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க அவர் தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வடகொரிய ஊடகங்கள் வெளியிட்ட அரசு நிகழ்ச்சிகளின் போட்டோக்களிலும், கிம் ஜோங் உன்னின் புதிய போட்டோக்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜோங் உன், வடகொரியாவின் வோன்சான் ரிசார்ட் பகுதியில் தங்கியிருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியா உடனான எங்களது உறவு உறுதியாக உள்ளது. கிம் ஜோங் உன்னின் உடல்நிலை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை சிறப்பாக இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் மூன் சங் இன் தெரிவித்துள்ளார்.

கிம் ஜோங் உன் பயணம் செய்யும் ரயில், வோன்சான் ரிசார்ட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வடகொரியா கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ரயில் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், , கிம் ஜோங் உன் அப்பகுதியில் தான் இருக்கிறாரா என்பதை தங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம் ஜோங் உன்னின் அறிவுரைப்படி, சீனா கடந்த வாரம் மருத்துவக்குழு ஒன்றை வடகொரியாவிற்கு அனுப்பியது.
அவர்களின் பயணம், கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை உடனடியாக பெற முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தென் கொரிய உயர் அதிகாரி, கிம் ஜோங் உன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் விரைவில் நாட்டு மக்களிடையே தோன்றி உரையாற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டிலும் இதுபோல சில மாதங்களுக்கு பொதுவாழ்க்கையில் இருந்து திடீரென்று தலைமறைவான கிம் ஜோங் உன், சில மாதங்களுக்கு பிறகு டிவியில் தோன்றி உரையாற்றியதுடன், ஊன்றுகோல் உதவியுடன் சிலகாலம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kim jong un north korea south korea on kim jong un kim jong un resort kim jong un dead

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X