பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா, மே மாதம் முடிசூடும் போது சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் அடங்கிய கிரீடத்தை அணிய மாட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பிபிசியின் படி, கிரீடத்தை பயன்படுத்தினால், இந்தியாவுடன் ராஜதந்திர தகராறு ஏற்படும் என்ற கவலைகள் இருந்தன. ஏனெனில் இந்தியா அதை திரும்பக் கோரியது.
105 காரட் கோஹினூர் உலகிலேயே மிகப்பெரிய வெட்டப்பட்ட வைரங்களில் ஒன்றாகும். இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திர பிரதேசத்தில் குண்டூருக்கு அருகில் காகதீய வம்சத்தால் முதலில் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்த வைரம், டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கும், பின்னர் முகலாயப் பேரரசுக்கும் சென்றது, அதைத் தொடர்ந்து பாரசீக படையெடுப்பாளர் நாதிர் ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் சென்றார். இது 1809 இல் பஞ்சாபின் சீக்கிய மகாராஜாவான ரஞ்சித் சிங்கை, அடைவதற்கு முன்பு வெவ்வேறு வம்சங்களைக் கடந்து சென்றது.
ரஞ்சித் சிங்கின் வாரிசு, ஆங்கிலேயர்களிடம் இராஜ்ஜியத்தை இழந்ததால், கோஹினூர் காலனித்துவ ஆட்சியின் போது ராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணி அதை ஒரு ப்ரூச் போல அணிந்திருந்தாலும், அது விரைவில் கிரீட நகைகளின் ஒரு பகுதியாக மாறியது – முதலில் ராணி அலெக்ஸாண்ட்ராவின் கிரீடத்திலும் பின்னர் ராணி மேரியின் கிரீடத்திலும் கோஹினூர் வைரம் இடம்பிடித்தது.
இறுதியாக, இது 1937 இல் நடைபெற்ற முடிசூட்டு விழாவிற்காக, மன்னர் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் மகாராணிக்காக செய்யப்பட்ட அழகான கிரீடத்தின் ஒரு பகுதியாக மாறியது.
மன்னர் ஆறாம் ஜார்ஜ் ஆட்சியின் போது பாராளுமன்றத்தின் மாநில திறப்பு விழாக்களிலும், மீண்டும் 1953 இல் அவரது மகள் இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவிலும் ராணி எலிசபெத் இந்த கிரீடத்தை அணிந்திருந்தார். அது ஏப்ரல் 2002 இல் அவரது சவப்பெட்டியில் மேல் இருந்தது. அதுதான் பொதுவில் கிரீடத்தின் கடைசி தோற்றமாகும்.

இந்நிலையில், பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத், மறைவைத் தொடர்ந்து, கோஹினூர் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்தியாவைத் தவிர, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் உரிமையைக் கோரியுள்ளன.
எனவே இங்கிலாந்தின் குயின் கன்சார்ட் கமிலா, அதற்கு பதிலாக ராணி மேரியின் கிரீடத்தை அணிவார், இது லண்டன் கோபுரத்திலிருந்து மறுஅளவிடப்படுவதற்காக எடுக்கப்பட்டது.
ராணி மேரியின் மகுடத்தைத் தேர்ந்தெடுப்பது சமீபத்திய வரலாற்றில் முதன்முறையாகும், இது நிலைத்தன்மை மற்றும் செயல்திறனின் நலன்களுக்காக, ஒரு புதிய கமிஷன் அமைக்கப்படுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள கிரீடம் ஒரு துணைவரின் முடிசூட்டு விழாவிற்கு பயன்படுத்தப்படும் என்று அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராணி மேரி கிரீடம் 1911 ஆம் ஆண்டு முடிசூட்டு விழாவிற்கு கிங் ஜார்ஜ் V இன் மனைவியால் அணியப்பட்டது. ராணி கன்சார்ட் கிரீடம் கடைசியாக 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
அரண்மனையின் அறிக்கையின்படி, ராணி மேரி கிரீடம் மறைந்த ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்லினன் III, IV மற்றும் V வைரங்களுடன் மீட்டமைக்கப்படும். வைரங்கள் அவருடைய தனிப்பட்ட சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்தன, மேலும் அவை அவரால் அடிக்கடி ப்ரோச்களாக அணியப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“